இந்த காலத்து இளைஞர்களைப் பற்றி கொஞ்சம் செல்லுங்களேன்! இந்த கேள்வியை நமது பெற்றார் இடமோ,நமக்கு முந்தைய தலைமுறையினரிடமோ கேட்டு பாருங்கள். பதில் ஒரே மாதிரி தான் இருக்கும். Internet,social media என்று வாழ்க்கையை தொலைத்தவர்கள்; cellphone கையுமாக இருக்கிறவர்கள் ; junk food தலைமுறையினர், குடும்பத்தார் மீது உள்ள பாசத்தை அவர்களிடம் காட்டாமல் love u mom னு Facebook status போடும் தலைமுறை. இவையெல்லாம் உண்மை என்ற போதிலும், பல தலைமுறைகளாக இல்லாத விஷயங்களும் எங்கள் தலைமுறையினரிடம் உண்டு. அதை கவனிக்கத்தான் யாரும் முயல்வதில்லை. நம அப்பா,தாத்தா காலங்களில் ஒருவர் வாழ்க்கையில் பெரிய ஈடுபாடுடின்றி சுற்றித் திரிந்தால் "கால் கட்டு போட்டா செரியாப் போயிரும்" என்று சொல்லி கல்யாணம் செய்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த கால இளைஞர்கள், தங்கள் வாழ்க்கையை தங்களது வழிகளில் செலுத்தி,தங்கள் லட்சியத்தை அடையாமல் கல்யாணம் குறித்து யோசிப்பதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி அதீதமாக இருக்கும் நிலையில், போட்டி போட்டுக்கொண்டு ஒடும் தலைமுறையினர் நாங்கள். வாரம் ஐந்து நாட்கள் வேலை செய்வதை யாரும் கவனிப்பதாக தெரியவில்லை. ஆ...
சப்தங்கள் தொலைத்த இரவில் தமிழை நோக்கி ஒரு தவம்.