Skip to main content

Posts

Showing posts from 2014

கொஞ்சம் பயணம்;கொஞ்சம் வரலாறு :1

கும்பகோணம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது டிகிரி காப்பி! தஞ்சாவூர் அருகே, காவிரிக் கரையோரம் அமைந்துள்ள கும்பகோணம், ஒரு காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் முக்கியப் புள்ளி! குடந்தை என்று அழைக்கப்பட்டு வந்த நகரம். தடுக்கி விழுந்தால் கோயில்கள்,காவிரியால் செழித்த வயல் வெளிகள் என்று விளங்கும் நகரம்! மகாமகத்திற்கும், ஜோதிடத்திற்கும் பெயர் போன நகரம்! இன்று கும்பகோணத்தில் உள்ள பட்டீஸ்வரம் தான்,  ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகராக இருந்த பழையாறை.விஜையால சோழனுக்கு பின்பு தான் தஞ்சை பிரசித்தி பெற துவங்கியது.அது வரை பழையாறை நகரே சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரமாகத் திகழ்ந்தது! அக்காலத்தில் கோயில்கள் ஆன்மீக சமந்தப்பட்ட விஷயமாக மட்டும் இல்லாமல், அந்த ஆட்சியின் ஒரு இயந்திரமாக இருந்திருக்கிறது!              காவிரி ஆற்றங்கரையில் உள்ள கோயில்கள் சில, காசிக்கு இணையானவை என்று கூறப்படுகிறது! அவற்றுல் ஒன்று, திருவிடைமருதூர் (திருஇடைமருதூர்) மகாலிங்கேஸ்வரர் கோவில்! இந்த கோவில் வரலாறு சற்று என்னை வியக்க வைத்தது! வரகுண பாண்டியன் என்ற அரசன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான்!  ஒரு நாள் அவன் குதிரை ஒரு அந்தணனை மிதித்துக

இ(ந்)து மதம் அல்ல கலாச்சாரம்

மதம் என்பது ஒரு மனிதனை கட்டுக்கோப்பாக வைக்க மட்டும் இன்றி அவன் வாழ்வை செம்மை படுத்தும் நெறிகளைகயும்  கொடுக்க வல்லது. உலகில் உள்ள எல்லா மதங்களும் சொல்லும் விஷயம் ஏரத்  தாள ஒன்றே. அதில் பல நூற்றாண்டுக்கு முன்பு தோன்றிய இந்து மதம் ,ஒரு நாகரீக மாற்றத்தை மட்டுமின்றி ஒரு அற்புதமான கலாசாரத்தையும் தந்தது. சைவம்,வைணவம், ஷக்தி வழிபாட்டு என்று பல உட்பிரிவுகளைக் கொண்டது. இந்து மதத்தை ஒரு அறிவியல் சார்ந்த விஷயமாக பார்ப்பதே உவப்பு. இந்து மதம் கொடுத்த யோகிகளும் ஞாநிகளும் ஏராளம். இந்து கோயில்களை எடுத்துக்கொள்வோம், கருவறை அமைந்த மூலஸ்தானத்தில்தான் காந்த அலைகளின் தாக்கம் அதிகம். கருவரையில், வைக்கப்படும் செப்பு தகடுகள் இந்த காந்த அலைகளை அதிகப்படுத்தும்.இந்த காரணம் கருதிதான் நாம் கோயிலுக்குச் செல்லும் போது கோயிலை சுற்றி வருகிறோம்.இதே போல மூட நம்பிக்கை என்று இந்த கால மனிதர்கள் கூறும் பல விஷயங்களுக்குப் பின்னால் அறிவியல் சார்ந்த பல விளக்கங்கள் கொடுக்கலாம்.நம் முன்னோர்கள் கணித்து வைத்த பஞ்சாங்கம் ,ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு அப்பால் வர இருக்கும் பௌர்ணமி, அம்மாவசை ஆகியவற்றை சரியாக சொல்கிறதே?எப்படி ?மனிதன் இப

காலத்தின் சூழற்சியில்....

காலச் சக்ரத்தின் சுழற்சியில் நாம் அனைவரும் மிகச் சிறிய அங்கங்கள். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில் பூமி இன்றில்லை. இன்று போல பல கண்டங்களோ ,நாடுகளோ அன்று இல்லை. ஹோமொசபியன்ஸ்  என்று அழைக்கப்படும் மனித இனம் உருவாகவே  பல்லாயிரம் ஆண்டுகள் ஆயிற்று. அதற்குப் பிறகு மொழி ,நாகரீகம் என்று படிப்படியாக வளரத் தொடங்கியது. பின்பு மனிதன் சமூகமாக வாழ கற்றுக் கொண்டான்.பின்பு மற்ற சமூகத்தார் நிலத்தை ஆக்ரமிக்க தொடங்கினான். தங்களை தற்காத்துக் கொள்ளவும் ,தங்களை விட வலு இல்லாத சமூகத்தை அடிமை படுத்தவும் எண்ணினார்கள். நாகரீக குழுமங்களாக இருந்த மக்கள் சாம்ராஜ்ய வட்டங்களுக்கு மாறினார்கள்.தங்களை காக்க ஒரு தலைமை இருந்ததால் மக்கள் சுக வாழ்வுக்கு பழக்கப்பட்டார்கள்.அனால் இந்த கால கட்டத்திலும் போர் என்பது இருந்தது.தற்காப்புக்கு போர் என்ற நிலமை மாறி,தங்கள் வலுவை அனைவருக்கும் காட்ட வேண்டும் என்ற எண்ணமும், பொருட்கள் பல வற்றை கொல்லை அடிக்கும் ஆவலோடுமே போர் நடந்தது.சர்வாதிகாரம் முடிந்த பிறகு சுதந்திர தேசங்கள் தோன்ற தொடங்கின.நாகரீகம் ,நவநாகரீகமாக மாறிற்று. ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதே மண்ணில் தமிழர்கள் வ

எண்ணெழுத் திகழேல்

ஒரு  மொழிக்கு இன்றி அமையா விஷயம் அந்த மொழியின் எழுத்துக்களே. எழுத்துக்கள் என்று நான் குறிப்பிடுவது அந்த மொழியில் வெளி  வந்த படைப்புக்களை. ஒரு சமுதாயம் எப்பேர்ப்பட்டது என்று அதன் படைப்புக்களை வைத்தே சொல்லிவிடலாம். எழுத்துக்கள் ஒரு நாகரிகத்தின் வெளிப்பாடு. நம் தமிழ் நாகரீகத்தை எடுத்துக் கொள்வோம். ஆதி  கால தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று இன்றைக்கு நம்மால் சொல்ல முடிகிறதே ...எப்படி?? அவர்கள் விட்டு விட்டுப் போன கல்வெட்டுகள்ளும், ஓலைச்சுவடிகளும்,நூல்களும் தான் இதற்கு பதில். சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை.ஒரு மொழியின் முக்யியத்துவம் அறிந்த நாகரீகத்தின் வெளிப்பாடுகள் நாம்.  அன்று இருந்த மக்களின் வாழ்வியல்,பொழுது போக்கு, அவர்களை ஆண்ட அரசன் எப்பேர்ப்பட்டவன்,ஒவ்வொரு வர்ண மக்களின் வாழ்கை முறை அனைத்தும் வெளிப்பட்டது எழுத்துக்களால் மட்டுமே. அகநானூறு ,கலித்தொகை ,பொருனராற்றுப்படை ,பெரும்பனராற்றுப்படை , நற்றிணை ,பரிபாடல் ,நெடுநல்வாடை, பட்டினப்பாலை,முல்லைப்பாட்டு, தொல்காப்பியம் :இவை எல்லாம் சங்கத்தமிழ் கொடுத்த சொத்துக்கள். கபிலர், நக்கீரர்,இளங்கோவடிகளில் தொடங்கி இன்று வாலி, வைரமுத்து, பாலகும

எத்திசையும் புகழ் மனக்க இருந்த பெரும் தமிழன் இங்கே

இந்த பெயருக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை,சக்கரவர்த்தி ,மாமன்னர் ராஜேந்திர  சோழன். கங்கை வரை தன் பலத்தை விஸ்தரித்ததால் அவர்  கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கப்பட்டார்.ராஜா ராஜா சோழ தேவருக்கு மகனாக பிறந்தவர். தந்தை, எட்டு அடி பாய்ந்த புலி:மகன் பதினாறு அடி பாய்ந்த புலி. சோழ தேசத்தின் மிக உன்னதமான ஆட்சிக்  காலம் ராஜேந்திரன் ஆட்சி தான். வீரத் தமிழனை அறியாத தமிழர்களாய் நம்முள் பலரும் வாழ்கிறோம். ஆடி மாதம்,மகர ராசி,திருவாதிரை  நட்சத்திரத்தில் பிறந்தவர். இந்த கணக்கு படி இன்று வீரமாமன்னன் ராஜேந்திரன் பிறந்த நாள். அவர்  அரியணை ஏறிய ஆயிரமாவது வருடம் இது. 1014ஆம் ஆண்டு ,ராஜா ராஜர் இறந்த பிறகு, அவர் அரியணை ஏறினார். இவர் பிறந்தநாளுக்கு சமர்பணமாக இதோ இந்த படைப்பு.                      தந்தைக்கு எட்டா கனியாக  இருந்த பலவும்,ராஜேந்திரன் கைக்கெட்டியது. சேர தேசத்தயும் ,பாண்டியர்களையும்  தலை காட்ட இயலாதவாறு  அடித்து நொறுக்கினார்.ராஜ ராஜன் காலத்திலிருந்தே  நெருக்கமாக இருந்த  கீழை  சாளுகியம் (இன்றைய ஆந்திரா பிரதேஷ்) ராஜேந்திரன் ஆட்சியிலும் அவ்வாறே இருந்தது. அவர் மகள் அமங்காதேவியை கீழை சாளுக்கிய இளவரச

சத்ரியனாய் இருப்பதை விட சானக்யனாய் இருப்பதே மேல்

சத்ரியனாய் இருப்பதை விட சானக்யனாய் இருப்பதே மேல் ,என்று பலர் கூற கேட்டிருக்கிறோம். இதற்கு அர்த்தம் வீரத்தை காட்டிலும் விவேகமே மேல் என்பதாகும். இதற்கு உதரனமாய் திகழ்ந்த சாணக்யன் யார் என்று நம்முள் பல பேருக்கு தெரிந்திருக்காது.விஷ்ணு குப்தா என்றும் கௌடில்யா என்றும் அழைக்கப்பட்டு  பாடலிபுத்ர நகரத்தில் பிறந்தவர். அப்பொழுது மகத நாட்டை ஆண்ட தனாநந்தா என்ற ஒரு அரசன், கொடுங்கோள் ஆட்சி செய்து வந்தான்.  அந்த ஆட்சியில் சானக்(சாணக்யாவின் தந்தை ) என்ற அழைக்கப்பட்ட ஒரு அந்தணன் இந்த ஆட்சிக்கு எதிராக குறல் கொடுத்து வந்தார். பின் அவர் தனானந்தாவால் கொல்லப்பட்டார்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சாணக்யா தநானந்தாவை அரியணை விட்டு அகற்றுவதாகவும் அது வரை தன்  சிகையை முடிய மாட்டேன் என்றும் சபதம் செய்தார்.பின்பு டக்ஷில்லா பல்கலைக்கழகத்துக்குச் சென்று வேதங்களை கற்றறார். அரசியல் மற்றும்  பொருளியல் துறையில் மிகச் சிறந்து விளங்கினார்.சிறு வயதிலிருந்தே நல்ல கேள்வி ஞானம் உடையவர்.அங்கு படித்து முடித்த பிறகு அங்கேயே கற்பிக்க ஆரம்பித்தார்.ஆச்சார்யா என்று அனைவராலும் அழைக்கப் பட்டார்.பல ராஜாக்களும் ,யுவராஜர்களும் இவரிடம் கல்வி

சந்தர்பங்களால் ஆனதே வாழ்கை !

' silence and smile are two powerful tools '  என்று ஒரு அழகான ஆங்கில பழமொழி உண்டு.  ஒரு மனிதனுக்கு சிரிப்பும் அமைதியும் மிக முக்கியம். அது  எப்படி,எப்பொழுது ,எங்கு வெளிப்படுகிறது என்பது ஒரு தனி நபரைப் பொருத்தே. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க மறந்தால் அது ராமாயணம்.   சிரிக்கக்கூடாத இடத்தில் மறந்து சிரித்தால் அது மகாபாரதம். மகாபாரதப் போருக்கே வித்தாக அமைந்தது அந்த தப்பான நேரத்திலும் இடத்திலும் ஏற்பட்ட சிரிப்புதான்.  பாஞ்சாலி  என்று அழைக்கப்பட்ட திரௌபதி சிரித்த அந்த சிரிப்பு தான் மகாபாரதத்தின் அடிப்படை. ராஜசூரியா யாகம் நடந்த அந்த நாளில்  கௌரவர்களில் ஒருவரான துரியோதனன்  கீழே விழுந்ததை பார்த்து திரௌபதி சிரித்தாள். ஏற்கனவே கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெறுகியது. அது  மட்டும் அல்லாது,திரௌபதியின் சுயம்வரத்தன்று கர்ணனை இழிவுபடுத்தியது எவ்வளவு பிசகு என்று திரௌபதி முன்னாலே அறிந்து இருந்தால் அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பாள். இந்த  இரண்டு சிரிப்பும் இல்லாமல் போய் இருந்தால் மகாபாரதம் வேறு மாதிரி போயிருக்கலாம்.அவள்  அ

காவேரி மைந்தன் பொன்னியின் செல்வனுக்கு

பாரதம் கண்ட மிக உன்னதமான சக்ரவர்த்திகளில் ஒருவர்   ராஜ ராஜ சோழன் . அருண் மொழி வர்மன் என்ற இயற்பெயர் மட்டும் இன்றி ராஜ ராஜ தேவர் , பெருவுடையார் , ராஜ கேசரி வர்மன் என்ற பல பெயர்களுக்குச் சொந்த க் காரர் . பராந்தக சுந்தர சோழருக்கும் , திருக்கோவிலூர் மலையமான் மகள்   வானவன்மாதேவிக்கும் மகனாக பிறந்தவர் . ஐப்பசி மாதம் , சதய நட்சத்ரத்தில் இவர் அவதரித்ததின் பொருட்டு , சதய திருவிழா என்று மிக கோலாகலமாக சோழ தேசம் முழுவதும் கொண்டாடப்பட்டது . இவரது தமையன் ஆதித்த கரிகலானே பட்டத்து இளவரசன் . இவரது தமக்கை குந்தவை நாச்சியார் . தமக்கையின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உடையவர் . தமக்கையின் மீது உள்ள பாசத்தில் தன் மகளுக்கும் குந்தவை என்ற பெயர் இட்டார் . சோழ அரசியலில் குந்தவை பிராட்டியாருக்கும் , அவளுடைய கணவனான வல்லத்து  அரசன் வந்தியாதேவருகும் ஒரு மிக பெரிய இடம் உண்டு . இதை நாம் தஞ்சை பெருவுடையார் கோவில் கல் வெட்டுகளில் காணலாம் . பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் இருக்க அருண் மொழி அரியணை ஏறியது எப்படி என்று

ராஜ ராஜனின் ராணிக்கே சமர்ப்பணம்!

சோழர்கள்...நம் தமிழக நாகரீகம்  வளர  வித்துக்களாய் இருந்தவர்கள்.சோழர்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது ராஜ ராஜ சோழன்.ராஜ ராஜ சோழன் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது தஞ்சை பெருவுடையார் கோவில்.ஆனால் எனக்கு வேறு ஒருவரும் நினைவில் வருகிறார்.பஞ்சவன் மாதேவி. அடிப்டையில் தேவரடியாளாக (நாட்டியப் பெண் ) இருந்தவர். ராஜ ராஜ சோழனை மணம் முடித்த பிறகு அரசியல் மற்றும் நிருவாகங்களில் பெறும் பங்கு வகித்தவர். பல போர்களை கண்டவர்.ஒரு அரசரின் மனைவியாக மற்றும் இன்றி சோழ தேசத்தின் மேன்மைக்காக உழைத்தவர். அவள் ராணியாக இருந்து ,சுகபோகங்களை அனுபவித்து மட்டும் போய் இருக்கலாம்.ஆனால் அவள் அப்படி செய்யவில்லை.தனக்கு பிறக்கக் கூடிய குழந்தையால் ராஜேந்திர சோழனுக்கு இளவரசர் பட்டம் கட்ட முடியாமல் போய் விடுமோ என்று பயந்து தன்னை மலடாகிக்கொண்டவள் . ராஜேந்திர சோழர் இவளுக்காக கட்டிய பள்ளிப்படை கோவில் இன்றளவும் பட்டீஸ்வரத்தில் இருப்பதை நாம் காண முடியும்.தன் சொந்தத் தாய் அல்லாவிட்டாலும் ,ராஜேந்திர சோழர் எழுப்பி உள்ள இந்த கோவிலை பார்க்கும் பொழுது அவள் எவ்வளவு உன்னதமான ராணியாக இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அந்த க