Skip to main content

கொஞ்சம் பயணம்;கொஞ்சம் வரலாறு :1

கும்பகோணம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது டிகிரி காப்பி! தஞ்சாவூர் அருகே, காவிரிக் கரையோரம் அமைந்துள்ள கும்பகோணம், ஒரு காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் முக்கியப் புள்ளி! குடந்தை என்று அழைக்கப்பட்டு வந்த நகரம். தடுக்கி விழுந்தால் கோயில்கள்,காவிரியால் செழித்த வயல் வெளிகள் என்று விளங்கும் நகரம்! மகாமகத்திற்கும், ஜோதிடத்திற்கும் பெயர் போன நகரம்! இன்று கும்பகோணத்தில் உள்ள பட்டீஸ்வரம் தான்,  ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகராக இருந்த பழையாறை.விஜையால சோழனுக்கு பின்பு தான் தஞ்சை பிரசித்தி பெற துவங்கியது.அது வரை பழையாறை நகரே சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரமாகத் திகழ்ந்தது! அக்காலத்தில்
கோயில்கள் ஆன்மீக சமந்தப்பட்ட விஷயமாக மட்டும் இல்லாமல், அந்த ஆட்சியின் ஒரு இயந்திரமாக இருந்திருக்கிறது!
             காவிரி ஆற்றங்கரையில் உள்ள கோயில்கள் சில, காசிக்கு இணையானவை என்று கூறப்படுகிறது! அவற்றுல் ஒன்று, திருவிடைமருதூர் (திருஇடைமருதூர்) மகாலிங்கேஸ்வரர் கோவில்! இந்த கோவில் வரலாறு சற்று என்னை வியக்க வைத்தது! வரகுண பாண்டியன் என்ற அரசன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான்!  ஒரு நாள் அவன் குதிரை ஒரு அந்தணனை மிதித்துக் கொன்றது.என்னதான் தன்னை அறியாமல் நடந்த நிகழ்ச்சி என்றாலும், ஒரு அந்தணனை கொன்றதால் அவனை பிரம்மஹத்தி பிடித்துக் கொண்டது.அது மட்டும் அல்லாமல் அந்த பிராமணன் ஆவியும் அரசனை துன்புறுத்தத் துவங்கியது. இதையடுத்து, வரகுண பாண்டியன் கனவில் சிவ பெருமான், தன்னை திருவிடைமருதூரில் வந்து வழிபடுமாறு கூறினார். சோழ நாட்டில் உள்ள குடந்தைக்கு எப்படி செல்வது?! பின் தன் படையுடன் சோழ படையை வென்று, மகாலிங்கேஸ்வரரை வழிபட சென்றான். பிரதான கிழக்கு வாசல் வழியாக உள்ளே சென்ற போது, பிரம்மஹத்தி அரசருக்காக காத்திருந்தது. உள்ளே சிவன் ராஜாவிடம்  மேற்கு வாசல் வழியாக வெளியேறினால் பிரம்மஹத்தி நீங்கும் என்று சொல்ல,அவரும்  அம்மன் சன்னதி வழியாக வெளியேறினார். இதனால், இன்றளவும் கிழக்கு வாசலில் உள்ளே செல்பவர்கள், மேற்கு வாசல் வழியாக வெளியேறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.அந்த பிரம்மஹத்தி இன்னும் அரசருக்காக காத்திருப்பதாக நம்பப்படுகிறது. சந்திரமுகி எப்பெக்டு வந்தாலும், இதுவே இத்தல வரலாறு!
ஒவ்வொரு கோயிலுக்கும் இவ்வாறான கதைகள் உண்டு. இது உண்மையா இல்லையா என்பதை நாம் ஆராய இயலாது. இதை நாம் வரலாற்றோடு ஒப்பிடுகையில், ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகுணன் மாபெரும் சிவ பக்தன் என்பதை பட்டினத்தார் பாடல், மாணிக்க வாசகரின் திருக்கோவையார், தளவாய்புரம் செப்பேடுகளில் காண்கிறோம்.
வரலாற்றையும், மதத்தையும் பிரித்து பார்க்க இயலாது!  அரசாங்கச் செயல்பாடுகளில் முக்கிய அங்கமாகவே கோயில்கள் திகழ்ந்தன. கோயில்கள் ஆத்திகர்களுக்கு மட்டும் இல்லை, கலை உணர்வு கொண்டவர்களுக்கும்,வரலாறு அறிய வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கும் மிகப் பெரும் கருவூலம்!

Comments

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

அத்தியாயம் 3

“ யார் நீ ?” கம்பீரமாக வந்தது கேள்வி . தோற்றத்துக்குரிய வீரமும் , தோரணையும் சற்று கூட பிசக வில்லை . அவள் நின்ற தோரணையே அவள் சாதாரண பெண் அல்ல என்பதைக் காட்டியது . சோழர்களைப் பற்றி ஆயிரம் தான் படித்திருந்தாலும் இவளை பார்த்த உடன் ‘ அப்பப்பா , பெண்களுக்கே இவ்வளவு வீரம் என்றால் இது உண்மையிலே புலி வம்சம் தான் ‘ என்ற எண்ணம் எனக்கு உதித்தது . மதிப்பு நிறைந்த விழிகளை அவள் கயல் விழிகளின் மேல் நாட்டியதும் , நினைவு தெளிந்தவன் போல் பேசத் துவங்கினேன் . “ என் பெயர் திவாகரவர்தன் . தங்களின் வீரத்தைக் கண்டு , உங்களை பாராட்டாமல் இருக்க இயலவில்லை . அதற்ககுள் இவர்கள் ...” “ வர்தனர் பரம்பரையோ ? வடக்கே உடுக்கும் உடுப்பு இதுவல்லவே . நீ பாரத தேசத்தவன் போல் இருக்கிறாய் . ஆனால் ஆங்கிலேயர் உடுப்பில் இருகிறாயே ?” “ நான் தமிழன்தான் . 1500 வருடம் காலப் பின் நோக்கில் வந்துள்ளேன் .” அவள் சிரித்துக் கொண்டே “ இளைஞரே , இதெல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள் . இது சோழ நாடு . போர் காலம் வேறு . பத்திராமாக ஊர் போ...

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு : மகாகவியின் உன்னதமான வரி இது. குரோதத்துக்கும் ரௌதிரதுக்கும் சிறிய வித்யாசம் மட்டுமே. அது எங்கு எப்பொழுது யார் மீது என்ற கேள்விகளைப் பொருத்தது.ரௌத்திரம் என்ற ஒன்றை பல இடங்களில் இந்த மனித சமூகம் மறந்து விடுகிறது. இதிகாசங்களில் தொடங்கி இன்று வரை மனிதன் ரௌத்திரம் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு நேர்ந்தால் அநீதி; பிறருக்கு நேர்ந்தால் விதி என்று என்னும் மனித குல மாணிக்கங்கள்  நாம். சமுகத்தில் நடக்கும் அநீதி கண்டு கோபம் கொள்வோர் எத்தனை பேர் ?நாடு என்ன நிலையில் இருந்தால் என்ன? யாரு எப்படி போன என்ன? எனக்குன்னு வர வரைக்கும் நான்  சும்மா தன இருப்பேன்.இப்படி பட்ட எண்ணம் தான் இன்று மேலோங்கி நிற்கிறது. இன்று மட்டும் அல்ல புண்ணிய காவியம் ஆனா மகாபாரதத்தில் தொடங்கி இன்று வரை இருக்கும் சாமானிய மக்கள் மன நிலை. அன்று அந்த துருபதன் மகளும்  ,வேள்வியில் உதித்தவளும் ஆனா திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதி கண்டு எழுந்தவர்கள் எத்தனை பேர்?   இதுவே. பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறுவது : "நெட்டை மரங்களென நின்று புலம்பினார்  பெட்டை புலம்பல் பிறர்க்குத் துணை...