Skip to main content

Posts

அத்தியாயம் 3

“ யார் நீ ?” கம்பீரமாக வந்தது கேள்வி . தோற்றத்துக்குரிய வீரமும் , தோரணையும் சற்று கூட பிசக வில்லை . அவள் நின்ற தோரணையே அவள் சாதாரண பெண் அல்ல என்பதைக் காட்டியது . சோழர்களைப் பற்றி ஆயிரம் தான் படித்திருந்தாலும் இவளை பார்த்த உடன் ‘ அப்பப்பா , பெண்களுக்கே இவ்வளவு வீரம் என்றால் இது உண்மையிலே புலி வம்சம் தான் ‘ என்ற எண்ணம் எனக்கு உதித்தது . மதிப்பு நிறைந்த விழிகளை அவள் கயல் விழிகளின் மேல் நாட்டியதும் , நினைவு தெளிந்தவன் போல் பேசத் துவங்கினேன் . “ என் பெயர் திவாகரவர்தன் . தங்களின் வீரத்தைக் கண்டு , உங்களை பாராட்டாமல் இருக்க இயலவில்லை . அதற்ககுள் இவர்கள் ...” “ வர்தனர் பரம்பரையோ ? வடக்கே உடுக்கும் உடுப்பு இதுவல்லவே . நீ பாரத தேசத்தவன் போல் இருக்கிறாய் . ஆனால் ஆங்கிலேயர் உடுப்பில் இருகிறாயே ?” “ நான் தமிழன்தான் . 1500 வருடம் காலப் பின் நோக்கில் வந்துள்ளேன் .” அவள் சிரித்துக் கொண்டே “ இளைஞரே , இதெல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள் . இது சோழ நாடு . போர் காலம் வேறு . பத்திராமாக ஊர் போ
Recent posts

எழுத்துக்களும் சித்திரங்களே 18

அத்தியாயம் 2

கலத்தில் இருந்து இறங்கியவுடன் லேசாக தலை சுற்றுவது போல இருந்தது. அதை சரி செய்து கொள்ளப் பயிற்சி இருந்தபடியால் சில விநாடிகளில் என்னை சரி செய்து கொண்டேன். கலத்தை மறைவில் விட்டுவிட்டு நடக்கத் துவங்கினேன். சற்று தூரம் நடந்ததும் ஒரு பெரிய மைதானம் போல் இருந்த இடத்திற்கு வந்தடைந்தேன். மைதானத்தைச் சுற்றி அங்காங்கே தென்னை ஓலைகள் கொண்டு நிழல் குடைகள் வடிவமைக்கப் பட்டு இருந்தன. அதன் அடியில் சிலர் எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். நானும் அங்கு சென்று நடப்பது என்ன என்று பார்க்கத் தொடங்கினேன். போர் கவசம் முற்றிலும் தரித்த ஒரு உருவம் தன் வாளைக் கச்சையில் இருந்து உருவி நின்றது. முகத்தை மூடிய படியால் அதன் முகத்தை சரியாகப் பார்க்க இயலவில்லையாயினும் ,அந்த உருவத்தைச் சுற்றி பலர் காயமுற்று வலியால் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்க்கும் பொழுது அவ்வுருவம் சாமானியன் அல்லன் என்றும், மாவீரன் என்றும் உறுதியாகச் சொல்ல இயலும். வேறொரு வீரன் அந்த உருவத்தை நோக்கி உயர்த்திய வாளோடு நகரத் தொடங்கியவுடன் அவ்வுருவம் அவன் அசைவைத் துல்லியமாக கணக்கிட்டு அவன் வாளைத் தடுத்தது. அதன் பின் நடந்த வாட் போரில் அவ் வீ

அத்தியாயம் 1

கி.பி.2050; இந்தியா “காலம் பொன் போன்றது “,“காலத்தை இழந்தால் திரும்பிப் பெற இயலாது”, “கடந்த காலத்தை எண்ணி எந்தப் பயனும்  இல்லை,எதையும் மாற்ற இயலாது” இதெல்லாம் நாம் வளரும் போது நமக்குச் சொல்லப்பட்டவை. எட்டா தொலைவில் உள்ள கிரகங்களுக்குச் சுற்றுலா செல்ல வழி வகுத்து விட்ட விஞ்ஞானம் இந்த பழ மொழிகளையா மாற்றாது? ஆம். காலப் பெருவெளியில் பயணிக்கும் எந்திரத்தை இந்திய விஞ்ஞானிகள் வடிவைமைத்து உள்ளார்கள். இது மிகவும் ரகசியமான பணி. 5 விஞ்ஞானிகள் மற்றும் என்னைப் போல 2  ஐ.ஏ.ஸ் அதிகாரிகளும் இக்குழுவில் உள்ளோம். இது சாமநியார்களின் பயன்பாட்டுக்கு வந்தால் நிகழக் கூடிய விபரிதங்கள் ஏராளம். அரசாங்கத்துக்கே தெரியாமல் நடக்கும் பணி ஆதலால், மிகவும் நம்பிக்கைக் குறியவர்களை மட்டும் உள்ளடக்கியுள்ளோம் .  இக்கருவியின் மூலம் கடந்த காலத்துக்கோ,எதிர் காலத்துக்கோ செல்லலாம். ஆனால் எந்த ஒரு நிகழ்வையும் மாற்ற இயலாது. அதாவது,எதிர் காலத்தில் சென்று என்ன நடக்கும் என்று காணலாம். ஆனால் நமக்கு சாதகமாக நிகழ்வுகளை மாற்ற இயலாது. அதையும் மாற்றவே எங்கள் உழைப்பு தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இது மிகவும் ரகசியமான தொழில்நுட்பம் ஆ

Women's day 2017

எழுத்துக்களும் சித்திரங்களே 17