Skip to main content

Posts

Showing posts from 2015

படித்ததில் பிடித்தது

ஊர் சுற்றி ஒரு காலத்தில் இன்று நானப்படியில்லை, பேர் பெற்ற தலங்கள் நூறு போகாமல் விட்டதில்லை. துணையென யாருமில்லை. எவருதவியும் கேட்டதில்லை. நதிகளின் தீரம் அலசி கோட்டைகள் ஏறியிரங்கி போர் நடந்த வெளிகள்கண்டு விம்மியே நின்றிருப்பேன். அரமணை வாசல் தோட்டம் மலைப்படி கோவில்குளங்கள் அன்றிருந்த ராஜபாட்டை அழியாத சிற்பக் கூடம் இவையெல்லாம் விருப்பக்கணக்கு மனிதரே வியப்பு எனக்கு. மனிதரை அறிந்து கொள்ள சரித்திரம் படிக்க வேணும் தன் கால் இடராதிருக்க மற்றவர் பாதை வேணும். அவனழிந்தது போண்ணாலென்றால் என் காமம் பம்மியிருக்கும். புத்தகச் செருக்குயென்றால் என் புத்தி அடக்கம்கொள்ளும். சிற்பத்தில் பொறுமை கண்டு என் படைப்புக் கூர்மையாகும். அரண்மனை அகலம் கண்டு அவனெங்கே என்று தேடும் அத்தனையும் மண்ணாய்போக அலட்டலகள் யாவும் அபத்தம் உழைப்பதை மேம்படுத்தி உயர்வேதும் விரும்பிடாது என் கடன் பணியேயென்று இருத்தலோர் தனித்தசுகமே. காலத்தின் கோலம்கண்டால் வாய்விட்டுச் சிரிக்கத்தோன்றும் சிலசமயம் துக்கம் பெருகி கண்ணீரும் தானாய் வழியும் நிகழ்காலம் கடந்த காலம் எதிர்காலம் மூன்றுக்குள்ளே இருப்பதே மனிதக்
முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப
கோஹினூர் ,கொல்லூர் என்ற இடத்தில் எடுக்கப்பட்டு இன்று பிரிடிஷ் மணிமுடியை அலங்கரிக்கும் நம் இந்திய சொத்து. கோஹினூர் என்ற வார்த்தைக்கு மலை அளவு வெளிச்சம் என்று அர்த்தம்.பெயருக்கு ஏற்ற வைரம் ஆஹா அது திகழ்கிறது.நம் மகாபாரதத்தில் ஸ்வயம்வண்டக்க (swayamvantaka) என்று அழைக்கப்பட்டது கோஹினூர் வைரமாக இருக்கலாம் என்று குறிப்புகள் உண்டு.பின்பு நாலாயிரம் வருடங்களுக்கு இது பற்றிய குறிப்புக்கள் ஏதும் இல்லை.1304 ஆண்டு வரை இந்த வைரம் மாள்வா அரசர்களிடம் இருந்து இருக்கிறது. அவர்கள் அதை கக்காடியர்களிடம் பரிசாக கொடுத்தார்கள்.பின்பு அலாவுதீன் கில்ஜி இடம் கோஹினூர் சிக்கியது. பின்பு முகலாய அரசர் பாபர் கையில் கோஹினூர் சென்றது.பாபர் சுய சரிதையான பாபர் நாமாவில் கோஹினூர் பற்றிய குறிப்புகள் உண்டு. அதில் ஒரு பெயர் தெரியாத மாளவா அரசர் உடைய வைரம் என்று எழுதப்படிருகிறது. பின்பு ஷாஜஹான் உடைய மயில் ஆசனத்தை கோஹினூர் அலங்கரித்து (peacock throne) .பெர்சிய நாட்டு நாதிர் ஷா படையெடுப்பில் வைரம் ஷா விடம் சென்றது.பின்பு ஷா 1747ஆம் வருடம் கொல்லப்பட்ட பிரகு அவர் தளபதி அஹமத் ஷா துர்ரானி இடம் வைரம் இருந்தது.அதன் பிறகு ஷா சுஜா துர்

அதர்மத்தின் ஊடேயும் சில தர்மங்கள்

நாம் வளரும்போழுதே நமக்கு சொல்லி கொடுக்கப்பட்ட விஷயங்களுள் ஒன்று ' தங்கள் சுற்றத்தை பார்த்து தேர்வு செய்வது '. நம்மை சுற்றி உள்ளவர்களை பொருத்தே நாம் சமுதாயத்தில் மதீப்பீடு செய்யப் படுகிறோம் என்றும் , ஆதலால் நாம் சுற்றத்தை சரி வர தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் காதுகள் வலிக்க நமக்கு சொல்லப்பட்டுவிட்டது. ஆதலால் அதையே கூற நான் இதை எழுதவில்லை. நம் தாதா பாட்டி காலத்துக்கு வேண்டும் என்றால் இவ்விதி பொருந்தும்.   நாம் வாழும் இந்த சூழலில் இவ்வாறு வாழ்வது கடினம். என்னைப் பொருத்தவரை சேற்றிலும் செந்தாமரைகள் பூக்கத்தான் செய்யும்.   எப்பேர்பட்ட சூழலிலும் , மிக மோசமானவர்கள் மத்தியிலும் கூட நல்லவனாக வாழ இயலும். அது நம் மனதை பொருத்தே அமைகிறது. சுற்றம் சரி இல்லையேல் கெடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டுதான். ஆனால் என் செய்ய ? இந்த காலக் கட்டத்தில் அவ்வாறு பழகினோம் ஆனால் சுற்றம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும். நம்மை சுற்றி நல்லவர்கள் தான் இருக்க வேண்டும் என்று நமக்கும் ஆசை இல்லையா என்ன ? நம்மிடம்   நல்லவர்களாக இருக்கிறார்களா   என்று மட்டும்   தான் பாக்க இயலுமோ ஒழிய , அவர்கள் அடிப்படையிலே நல்லவர

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு : மகாகவியின் உன்னதமான வரி இது. குரோதத்துக்கும் ரௌதிரதுக்கும் சிறிய வித்யாசம் மட்டுமே. அது எங்கு எப்பொழுது யார் மீது என்ற கேள்விகளைப் பொருத்தது.ரௌத்திரம் என்ற ஒன்றை பல இடங்களில் இந்த மனித சமூகம் மறந்து விடுகிறது. இதிகாசங்களில் தொடங்கி இன்று வரை மனிதன் ரௌத்திரம் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு நேர்ந்தால் அநீதி; பிறருக்கு நேர்ந்தால் விதி என்று என்னும் மனித குல மாணிக்கங்கள்  நாம். சமுகத்தில் நடக்கும் அநீதி கண்டு கோபம் கொள்வோர் எத்தனை பேர் ?நாடு என்ன நிலையில் இருந்தால் என்ன? யாரு எப்படி போன என்ன? எனக்குன்னு வர வரைக்கும் நான்  சும்மா தன இருப்பேன்.இப்படி பட்ட எண்ணம் தான் இன்று மேலோங்கி நிற்கிறது. இன்று மட்டும் அல்ல புண்ணிய காவியம் ஆனா மகாபாரதத்தில் தொடங்கி இன்று வரை இருக்கும் சாமானிய மக்கள் மன நிலை. அன்று அந்த துருபதன் மகளும்  ,வேள்வியில் உதித்தவளும் ஆனா திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதி கண்டு எழுந்தவர்கள் எத்தனை பேர்?   இதுவே. பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறுவது : "நெட்டை மரங்களென நின்று புலம்பினார்  பெட்டை புலம்பல் பிறர்க்குத் துணையாமோ ?" அநீதி கண்டு வி

கலி யுக வரதனே கிருஷ்ணா கிருஷ்ணா

இன்றைய காலக் கட்டத்தில் நாம் அடிக்கடி கேட்கும் ஒன்று "கலி காலம் ". அப்படி என்றால் என்ன ? இது கலியுகம் என்றால் வேறு யுகங்கள் இருக்குமா?/இருந்தது உண்டா ? இதற்கான பதில் இந்து மத நூல் ஆனா ஸ்ரீமத் பாகவதத்தில் உண்டு. இந்துக் கலாச்சாரத்தின் படி யுகங்கள் நான்கு உண்டு. முதலாவது சத்ய யுகம்: சத்தியமும் தர்மமும் நிறைந்து இருந்தது.விஷ்ணு முதல் நான்கு அவதாரங்கள்  எடுத்த யுகம்.அடுத்து திரேதா யுகம்: பொதுவாக தர்மத்தை நான்கு கால்களை உடைய எருதாகக் கொண்டால்,இந்த திரேதா யுகத்தில் 3 கால்கள் மட்டுமே. வாமன, பரசுராமன், ராம அவதாரங்களை விஷ்ணு எடுத்த யுகம். அடுத்து துவாப்பர (Dwapara) யுகம். இதில் தர்மத்துக்கு 2 கால்கள். கிருஷ்ணன் அவதரித்த யுகம். பாகவத புராணத்தின் படி இந்த யுகம் 864000 வருடங்கள் நீடித்தது. குருக்க்ஷேத்ரப் போர் முடிந்து கிருஷ்ணன் இந்த பூவுலகை விட்டு சென்ற உடனே கலி யுகம் தொடங்கியது. மகாபாரதத்தில், வில் வித்தைக்கு பெயர் போன அர்ஜூனனுடைய மகன் அபிமன்யூ. வீரத்துக்கு பெயர் போன அபிமன்யூ சக்ரவ்யூகத்தில் இறந்த போது, அவன் மனைவி உத்ரா கருவுற்றிருந்தால். அந்த கரு தான் பின் நாளில் பரிக்ஷித் ம

கல்லிலே கலைவண்ணம் கண்டவர்கள்!

ஹோய்ஸாளர்களின் சின்னம் பேலூர், ஹளேபீடு~சிற்ப கலையில் ஒர் சொர்கம். தக்ஷிணபாதத்தின்  பனாரஸ் என்று கூறப்படும் பேலூர்,கர்நாடக மாநில தலைநகரமான பெங்களூரிலிருந்து 222 கி.மீ உம்,மாவட்ட தலைநகரான ஹாஸன் என்ற ஊரில் இருந்து 38 கி.மீ தூரத்தில் உள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டு இறுதியில் சாளுக்கியர்கள் வீழத் துவங்கி இருந்தார்கள். அதன் பிறகு நான்கு முக்கிய சாம்ராஜ்யங்கள் தெற்கே இருந்தன. அவற்றில் ஒன்று ஹோய்ஸாளர்கள். 13ஆம் நூற்றாண்டில் கர்நாடகவிலுள்ள முக்கிய பகுதிகள், தமிழ் நாடு மற்றும் கேரளா வில் சில பகுதிகளும், ஆந்திரா மற்றும் டெக்கான் பகுதிகளும் ஹோய்ஸாளர்களின் கீழ் இருந்தது. அவர்களில் முக்கிய அரசர்கள் விஷ்ணுவர்தனன், இரண்டாம் மற்றும் மூன்றாம் வீரபல்லாள ஆவர். விஷ்ணுவர்தன் காலத்தில் பேலூர் ஹோய்ஸாளர்களின் தலைநகராக இருந்தது. பேலூர் சென்னகேசவ ஆலயம் 1117ஆம் ஆண்டு விஷ்ணுவர்தனால் கட்டத் தொடங்கப்பட்டது. ஹோய்ஸாளர்களின் கலை நுட்பம் மிக நுண்ணிய வேலைப் பாடுகளைக் கொண்டது. பேலூர்க்குப் பிறகு ஹளேபீடுவை தலைநகராகக் கொண்டு இயங்கத் தொடங்கியது. ஹோய்ஸாளர்களின் கோவில்கள் அலங்காரச் சிற்பகலையோடு கூடிய ஜன்னல்கள

(W)hatsapp (T)witter (F)acebook தலைமுறை

இந்த காலத்து இளைஞர்களைப் பற்றி கொஞ்சம் செல்லுங்களேன்! இந்த கேள்வியை நமது பெற்றார் இடமோ,நமக்கு முந்தைய தலைமுறையினரிடமோ கேட்டு பாருங்கள். பதில் ஒரே மாதிரி தான் இருக்கும். Internet,social media என்று வாழ்க்கையை தொலைத்தவர்கள்; cellphone கையுமாக இருக்கிறவர்கள் ; junk food தலைமுறையினர், குடும்பத்தார் மீது உள்ள பாசத்தை அவர்களிடம் காட்டாமல் love u mom னு Facebook status போடும் தலைமுறை. இவையெல்லாம் உண்மை என்ற போதிலும், பல தலைமுறைகளாக இல்லாத விஷயங்களும் எங்கள் தலைமுறையினரிடம் உண்டு. அதை கவனிக்கத்தான் யாரும் முயல்வதில்லை. நம அப்பா,தாத்தா காலங்களில் ஒருவர் வாழ்க்கையில் பெரிய ஈடுபாடுடின்றி சுற்றித் திரிந்தால் "கால் கட்டு போட்டா செரியாப் போயிரும்" என்று சொல்லி கல்யாணம் செய்து வைப்பது வழக்கம். ஆனால் இந்த கால இளைஞர்கள், தங்கள் வாழ்க்கையை தங்களது வழிகளில் செலுத்தி,தங்கள் லட்சியத்தை அடையாமல் கல்யாணம் குறித்து யோசிப்பதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி  அதீதமாக இருக்கும் நிலையில், போட்டி போட்டுக்கொண்டு ஒடும் தலைமுறையினர் நாங்கள். வாரம் ஐந்து நாட்கள் வேலை செய்வதை  யாரும் கவனிப்பதாக தெரியவில்லை. ஆ

வரலாற்றுப் புத்தகத்துக்குள்

வரலாறா?!? அதை பத்தாம் வகுப்பு புத்தகத்தோட மூட்டை கட்டிட்டோமே! இந்த தலைமுறையினர் பதில். அசோகர் மரம் நட்டதும்,காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது மட்டும் தான் நமக்கு நெனவு இருக்கு.விஞ்ஞானம் எவ்வளவு முக்கியமோ,வரலாறும் அவ்வளவு முக்கியமே.இந்த காலகட்டத்தில், வரலாற்றை வருடங்கள் கொண்ட பெட்டகமாகவே பார்க்கிறோம். ஆனால் வரலாறு என்பது ஓர் உணர்வு. நாம் வாழும் இந்த மண்ணில் ஆயிரக்கணக்கான சாம்ராஜ்யங்களும், லட்சக்கணக்கான மன்னரகளும்,பல கலாச்சாரங்களும், நாகரீகங்களும் தோன்றி மறைந்திருக்கிறன. இப்பொழுது இந்தியா வல்லரசு நாடுகளில் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம், விஞ்ஞானத்தில் ஜப்பானுக்கு நிகரில்லாமலிருக்கலாம். ஆனால் அன்றோ, உலகத்தில் இருந்த அத்தனை அரசர்களுக்கும் இந்தியாவை ஆட்சி செய்வதே கனவாக இருந்தது. எங்கும் இல்லா செழிப்பு,வணிகம், மக்கள், கலை.இவைதான் இந்தியா மீது படையெடுக்க முக்கிய காரணங்களாக இருந்தன.தொழில்நுட்பங்களிலும் முதன்மையானவர்களாகவே இருந்து இருக்கிரோம்.தொழில்நுட்பம் இன்றியா ராஜேந்திர சோழர் கடாரம் வரை படை எடுத்தார்?! விஞ்ஞானம் இல்லாமலா தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அதே கம்பீரத்தோடு நிற்கிறத