Skip to main content

கல்லிலே கலைவண்ணம் கண்டவர்கள்!

ஹோய்ஸாளர்களின் சின்னம்



பேலூர், ஹளேபீடு~சிற்ப கலையில் ஒர் சொர்கம்.
தக்ஷிணபாதத்தின்  பனாரஸ் என்று கூறப்படும் பேலூர்,கர்நாடக மாநில தலைநகரமான பெங்களூரிலிருந்து 222 கி.மீ உம்,மாவட்ட தலைநகரான ஹாஸன் என்ற ஊரில் இருந்து 38 கி.மீ தூரத்தில் உள்ளது.

பன்னிரண்டாம் நூற்றாண்டு இறுதியில் சாளுக்கியர்கள் வீழத் துவங்கி இருந்தார்கள். அதன் பிறகு நான்கு முக்கிய சாம்ராஜ்யங்கள் தெற்கே இருந்தன. அவற்றில் ஒன்று ஹோய்ஸாளர்கள். 13ஆம் நூற்றாண்டில் கர்நாடகவிலுள்ள முக்கிய பகுதிகள், தமிழ் நாடு மற்றும் கேரளா வில் சில பகுதிகளும், ஆந்திரா மற்றும் டெக்கான் பகுதிகளும் ஹோய்ஸாளர்களின் கீழ் இருந்தது. அவர்களில் முக்கிய அரசர்கள்
விஷ்ணுவர்தனன், இரண்டாம் மற்றும் மூன்றாம் வீரபல்லாள ஆவர்.

விஷ்ணுவர்தன் காலத்தில் பேலூர் ஹோய்ஸாளர்களின் தலைநகராக இருந்தது. பேலூர் சென்னகேசவ ஆலயம் 1117ஆம் ஆண்டு விஷ்ணுவர்தனால் கட்டத் தொடங்கப்பட்டது. ஹோய்ஸாளர்களின் கலை நுட்பம் மிக நுண்ணிய வேலைப் பாடுகளைக் கொண்டது. பேலூர்க்குப் பிறகு ஹளேபீடுவை தலைநகராகக் கொண்டு இயங்கத் தொடங்கியது.
ஹோய்ஸாளர்களின் கோவில்கள் அலங்காரச் சிற்பகலையோடு கூடிய ஜன்னல்கள்,கருவறைக் கூடம்,தொடர் கூடம், நவரங்க மண்டபம், குளம் என்று அனைத்தும் உண்டு. சென்னகேசவ ஆலயத்தில் பெருமாள் மோகினி ரூபத்தில் காட்சி தருகிறார்.

இந்த கோவில்களில் உள்ள சிற்பங்கள் இன்று நாம் மலையென நம்பி இருக்கும் Technology ஐயே சந்தேகிக்க வைக்கிறது. நளினம் சற்றும் குறையாத சிற்பங்கள்,ராமாயண,மகாபாரதக் காட்சிகளை விளக்கும் சிற்பங்கள், எந்தப் படையெடுப்புகளிலும் சிக்கிக் கொள்ளாத கோபுரங்கள், எத்தனை தலைமுறைகள் தாண்டினாலும் எங்கள் சாம்ராஜ்யத்தின் புகழ் நிலைத்து நிற்க வேண்டும் என்று உழைத்த சிற்பிகள்..இவை மட்டும் இன்றி கடவுள் அருளும் இருந்தமையால் மட்டுமே கல்லிலே கலைவண்ணம் உருவாக்க முடிந்தது.

நமது தமிழ்க் கோவில்கள் பிரம்மாண்டம்..
இவை நுணுக்கம்.
ஹளேபீடு 
பேலூர் 
இனியேனும் கோவில்களுக்குச் சென்றால் வரலாறும் அறிந்து வருவோம். நம் மதமும், கலாச்சாரமும் அழியாமல் காத்த அனைவருக்கும் நாhம் காட்டும் நன்றி அதுவே!
விஷ்ணுவர்தனின் பட்டத்து ராணி சாந்தலா தேவி கட்டியது _கப்பே சென்னிகராயா கோவில்,பேலூர்
சென்னகேசவ ஆலயம்,
பேலூர்

சிற்ப வேலைப் பாடுகளைக் கொண்ட பேலூர் 
மகாபாரதக் காட்சி - அபிமன்யூ பத்மவ்யூகத்தில் மாட்டிக் கொண்ட காட்சி (circle to the right) 
ராமாயண காட்சி _வாணரங்கள் சூழ ராமன் அம்பு எய்தும் காட்சி -பல மரங்களை துழைத்து செல்லும் அம்பு
ஹளேபீடு, சுற்றுச்சுவர் 

Comments

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

அத்தியாயம் 3

“ யார் நீ ?” கம்பீரமாக வந்தது கேள்வி . தோற்றத்துக்குரிய வீரமும் , தோரணையும் சற்று கூட பிசக வில்லை . அவள் நின்ற தோரணையே அவள் சாதாரண பெண் அல்ல என்பதைக் காட்டியது . சோழர்களைப் பற்றி ஆயிரம் தான் படித்திருந்தாலும் இவளை பார்த்த உடன் ‘ அப்பப்பா , பெண்களுக்கே இவ்வளவு வீரம் என்றால் இது உண்மையிலே புலி வம்சம் தான் ‘ என்ற எண்ணம் எனக்கு உதித்தது . மதிப்பு நிறைந்த விழிகளை அவள் கயல் விழிகளின் மேல் நாட்டியதும் , நினைவு தெளிந்தவன் போல் பேசத் துவங்கினேன் . “ என் பெயர் திவாகரவர்தன் . தங்களின் வீரத்தைக் கண்டு , உங்களை பாராட்டாமல் இருக்க இயலவில்லை . அதற்ககுள் இவர்கள் ...” “ வர்தனர் பரம்பரையோ ? வடக்கே உடுக்கும் உடுப்பு இதுவல்லவே . நீ பாரத தேசத்தவன் போல் இருக்கிறாய் . ஆனால் ஆங்கிலேயர் உடுப்பில் இருகிறாயே ?” “ நான் தமிழன்தான் . 1500 வருடம் காலப் பின் நோக்கில் வந்துள்ளேன் .” அவள் சிரித்துக் கொண்டே “ இளைஞரே , இதெல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள் . இது சோழ நாடு . போர் காலம் வேறு . பத்திராமாக ஊர் போ...

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு : மகாகவியின் உன்னதமான வரி இது. குரோதத்துக்கும் ரௌதிரதுக்கும் சிறிய வித்யாசம் மட்டுமே. அது எங்கு எப்பொழுது யார் மீது என்ற கேள்விகளைப் பொருத்தது.ரௌத்திரம் என்ற ஒன்றை பல இடங்களில் இந்த மனித சமூகம் மறந்து விடுகிறது. இதிகாசங்களில் தொடங்கி இன்று வரை மனிதன் ரௌத்திரம் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு நேர்ந்தால் அநீதி; பிறருக்கு நேர்ந்தால் விதி என்று என்னும் மனித குல மாணிக்கங்கள்  நாம். சமுகத்தில் நடக்கும் அநீதி கண்டு கோபம் கொள்வோர் எத்தனை பேர் ?நாடு என்ன நிலையில் இருந்தால் என்ன? யாரு எப்படி போன என்ன? எனக்குன்னு வர வரைக்கும் நான்  சும்மா தன இருப்பேன்.இப்படி பட்ட எண்ணம் தான் இன்று மேலோங்கி நிற்கிறது. இன்று மட்டும் அல்ல புண்ணிய காவியம் ஆனா மகாபாரதத்தில் தொடங்கி இன்று வரை இருக்கும் சாமானிய மக்கள் மன நிலை. அன்று அந்த துருபதன் மகளும்  ,வேள்வியில் உதித்தவளும் ஆனா திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதி கண்டு எழுந்தவர்கள் எத்தனை பேர்?   இதுவே. பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறுவது : "நெட்டை மரங்களென நின்று புலம்பினார்  பெட்டை புலம்பல் பிறர்க்குத் துணை...