Skip to main content

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு : மகாகவியின் உன்னதமான வரி இது. குரோதத்துக்கும் ரௌதிரதுக்கும் சிறிய வித்யாசம் மட்டுமே. அது எங்கு எப்பொழுது யார் மீது என்ற கேள்விகளைப் பொருத்தது.ரௌத்திரம் என்ற ஒன்றை பல இடங்களில் இந்த மனித சமூகம் மறந்து விடுகிறது. இதிகாசங்களில் தொடங்கி இன்று வரை மனிதன் ரௌத்திரம் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு நேர்ந்தால் அநீதி; பிறருக்கு நேர்ந்தால் விதி என்று என்னும் மனித குல மாணிக்கங்கள்  நாம். சமுகத்தில் நடக்கும் அநீதி கண்டு கோபம் கொள்வோர் எத்தனை பேர் ?நாடு என்ன நிலையில் இருந்தால் என்ன? யாரு எப்படி போன என்ன? எனக்குன்னு வர வரைக்கும் நான்  சும்மா தன இருப்பேன்.இப்படி பட்ட எண்ணம் தான் இன்று மேலோங்கி நிற்கிறது. இன்று மட்டும் அல்ல புண்ணிய காவியம் ஆனா மகாபாரதத்தில் தொடங்கி இன்று வரை இருக்கும் சாமானிய மக்கள் மன நிலை. அன்று அந்த துருபதன் மகளும்  ,வேள்வியில் உதித்தவளும் ஆனா திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதி கண்டு எழுந்தவர்கள் எத்தனை பேர்?   இதுவே. பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறுவது :
"நெட்டை மரங்களென நின்று புலம்பினார் 
பெட்டை புலம்பல் பிறர்க்குத் துணையாமோ ?"
அநீதி கண்டு வியப்புற்று புலம்புவது அல்ல ரௌத்திரம். அந்த அநீதி கண்டு கோபம் கொண்டு அதை தடுக்க என்ன செய்கிறோம் என்பதுதான் உண்மையான ரௌத்திரம். அடிமை ஆட்சி (Slave Dynasty) இங்கே நுழையும் போது,எங்கள் நாட்டுக்கு எந்த ஆபத்தும் இல்லையே என்று கை கட்டி சும்மா இருந்த பேரரசுகளும் பின்னால் ஒரு காலத்தில் தங்கள் நாடுகளை அவர்களிடம் இழக்க நேர்ந்தது. எது வந்த போதினும், எனக்கு வரும் வரை நான் ஏன் அதில் தலை இட வேண்டும் என்ற எண்ணத்தாலோ என்னவோ நம் நாடு பிரர்களிடம் அடிமை பட்டு கிடந்தது. அன்று வெளி நாட்டவரிடம் இன்று நம் அரசியல்வாதிகளிடம். எவ்ளளவு கோடி ஊழல் நடந்தால் என்ன? எங்களுக்கு தேவ ஒரு இலவசம். இதுதான் இன்றைய மக்களின் மனோபாவம். ஊழல் வந்த புதுசுக்கு  நாலு நாள் கோபப்படுவோம் ,அதுக்குமேல ஒன்னும் செய்ய மாட்டோம். ரௌத்திரத்தால் மாறிய வரலாறுகள் பல.பிரெஞ்சு புரட்சி ,நம் சிப்பாய் புரட்சி ...ஏன் நம் நாட்டின் சுதந்திரம் கூட ரௌத்திரத்தின் விளைவு தான் . பல நூற்றாண்டுகாலம் அடிமை பட்டு நம் செல்வங்கள் அனைத்தும் சுரண்ட பட்ட பின்பே நமக்கு இந்த போராடும் மனப்பான்மை கிட்டியது. எங்களுக்கு என்ன என்று கை கட்டி நம் தலைவர்கள் இருந்து இருந்தால் , இன்றும் சுதந்திரம் கிட்டி இருக்காது.நாடு ,அரசியல் இவை எல்லாம் கூட விட்டு விடலாம் பிறருக்கு ஏதேனும் ஒரு அநீதி இழைக்கப் படும்போது , செல்போனில் படம் பிடித்து whatsapp இல் அனுப்பி நம் இரங்கலை தெரிவிப்பதை விட்டுவிட்டு நம்மால்அங்கு என்ன செய்ய முடியும் என்பதை சிந்தியுங்கள். இப்பொழுதேனும் விழித்துக் கொள்வோம் , மிஞ்சி உள்ள செல்வங்களையும் நம் உழைப்பையும் அரசியல்வாதிகள் சுரண்டும் முன்னேனும் ....

Comments

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

அத்தியாயம் 3

“ யார் நீ ?” கம்பீரமாக வந்தது கேள்வி . தோற்றத்துக்குரிய வீரமும் , தோரணையும் சற்று கூட பிசக வில்லை . அவள் நின்ற தோரணையே அவள் சாதாரண பெண் அல்ல என்பதைக் காட்டியது . சோழர்களைப் பற்றி ஆயிரம் தான் படித்திருந்தாலும் இவளை பார்த்த உடன் ‘ அப்பப்பா , பெண்களுக்கே இவ்வளவு வீரம் என்றால் இது உண்மையிலே புலி வம்சம் தான் ‘ என்ற எண்ணம் எனக்கு உதித்தது . மதிப்பு நிறைந்த விழிகளை அவள் கயல் விழிகளின் மேல் நாட்டியதும் , நினைவு தெளிந்தவன் போல் பேசத் துவங்கினேன் . “ என் பெயர் திவாகரவர்தன் . தங்களின் வீரத்தைக் கண்டு , உங்களை பாராட்டாமல் இருக்க இயலவில்லை . அதற்ககுள் இவர்கள் ...” “ வர்தனர் பரம்பரையோ ? வடக்கே உடுக்கும் உடுப்பு இதுவல்லவே . நீ பாரத தேசத்தவன் போல் இருக்கிறாய் . ஆனால் ஆங்கிலேயர் உடுப்பில் இருகிறாயே ?” “ நான் தமிழன்தான் . 1500 வருடம் காலப் பின் நோக்கில் வந்துள்ளேன் .” அவள் சிரித்துக் கொண்டே “ இளைஞரே , இதெல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள் . இது சோழ நாடு . போர் காலம் வேறு . பத்திராமாக ஊர் போ...