கோஹினூர் ,கொல்லூர் என்ற இடத்தில் எடுக்கப்பட்டு இன்று பிரிடிஷ் மணிமுடியை அலங்கரிக்கும் நம் இந்திய சொத்து. கோஹினூர் என்ற வார்த்தைக்கு மலை அளவு வெளிச்சம் என்று அர்த்தம்.பெயருக்கு ஏற்ற வைரம் ஆஹா அது திகழ்கிறது.நம் மகாபாரதத்தில் ஸ்வயம்வண்டக்க (swayamvantaka) என்று அழைக்கப்பட்டது கோஹினூர் வைரமாக இருக்கலாம் என்று குறிப்புகள் உண்டு.பின்பு நாலாயிரம் வருடங்களுக்கு இது பற்றிய குறிப்புக்கள் ஏதும் இல்லை.1304 ஆண்டு வரை இந்த வைரம் மாள்வா அரசர்களிடம் இருந்து இருக்கிறது. அவர்கள் அதை கக்காடியர்களிடம் பரிசாக கொடுத்தார்கள்.பின்பு அலாவுதீன் கில்ஜி இடம் கோஹினூர் சிக்கியது. பின்பு முகலாய அரசர் பாபர் கையில் கோஹினூர் சென்றது.பாபர் சுய சரிதையான பாபர் நாமாவில் கோஹினூர் பற்றிய குறிப்புகள் உண்டு. அதில் ஒரு பெயர் தெரியாத மாளவா அரசர் உடைய வைரம் என்று எழுதப்படிருகிறது.
பின்பு ஷாஜஹான் உடைய மயில் ஆசனத்தை கோஹினூர் அலங்கரித்து (peacock throne) .பெர்சிய நாட்டு நாதிர் ஷா படையெடுப்பில் வைரம் ஷா விடம் சென்றது.பின்பு ஷா 1747ஆம் வருடம் கொல்லப்பட்ட பிரகு அவர் தளபதி அஹமத் ஷா துர்ரானி இடம் வைரம் இருந்தது.அதன் பிறகு ஷா சுஜா துர்ரானி கை மாறியது. ஷா சுஜாவுக்கு ஆப்கான் அரியணை கிடைக்க ரஞ்சித் சிங் உதவ கோஹினூர் விலை போனது. 1813இல் ரஞ்சித் சிங்க் என்ற பஞ்சாப் அரசர் மூலம் மறுபடியும் கோஹினூர் இந்திய வந்து சேர்ந்தது.ரஞ்சித் சிங் இறந்த பிறகு வைரம் அவர் மகன் தலிப் சிங் கையில் சென்றது. பின்பு ஈஸ்ட் இந்திய கம்பெனி கையில் பஞ்சாப் வீழ்ந்தது. அதன் பிறகு கோஹினூர் பிரிடிஷ் கஜானாவில் சென்று விட்டது. விக்டோரியா வின் மணி முடியை அலங்கரித்து நம் பொக்கிஷமே.
கோஹினூர்கு உள்ள சாபம் என்று சொல்லப்படும் ஒன்று, ஒருவர் கைக்கு சென்று 10-25 வருடங்களுக்கு பிறகு அதை தூய்மையாக வைக்காதவர்களுக்கு நாடு,குடும்பம் என அனைத்தையும் இழக்க நேரிடும் என்றும்,பெண்கள் கைகளில் தான் அது நிலைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரங்கள் கூறுபவர்களும் உண்டு. இது ஏதார்த்தமா இல்லை கொஹிநூரின் சாபமா ? அறிவார் இல்லை.
கோஹினூர்க்கு அடுத்தபடியாக ஒர்லோவ் (orlov diamonds) இன்று ரஷ்யன் மணிமுடியில் இருக்கும் சொத்து இந்தியாவின் உடையது. இந்த ஒர்லோவ் வைரம் ஒரு காலத்தில் சயன கோலம் கொண்ட எம்பெருமான் ஸ்ரீ ரங்க நாதருடைய கண்கள்.பிரெஞ்சு வீரன் ஒருவனால் திருடப் பட்டு ,இன்று அது இருக்கும் இடமோ மாஸ்கோ.
இந்த கோஹினூர் வைரம் போல நம் நாட்டை விட்டு சென்ற செல்வங்கள் ஏராளம் . வைரம்,வைடூரியம் ,முத்து,மாணிக்கம்,பவளம் என்று படையெடுப்பில் அழிக்க பட்ட செல்வங்கள் இன்று இங்கிருந்திருந்தால்? இந்திய வல்லரசு ஆக ஏன் தேதி குறிக்கிறது?
பின்பு ஷாஜஹான் உடைய மயில் ஆசனத்தை கோஹினூர் அலங்கரித்து (peacock throne) .பெர்சிய நாட்டு நாதிர் ஷா படையெடுப்பில் வைரம் ஷா விடம் சென்றது.பின்பு ஷா 1747ஆம் வருடம் கொல்லப்பட்ட பிரகு அவர் தளபதி அஹமத் ஷா துர்ரானி இடம் வைரம் இருந்தது.அதன் பிறகு ஷா சுஜா துர்ரானி கை மாறியது. ஷா சுஜாவுக்கு ஆப்கான் அரியணை கிடைக்க ரஞ்சித் சிங் உதவ கோஹினூர் விலை போனது. 1813இல் ரஞ்சித் சிங்க் என்ற பஞ்சாப் அரசர் மூலம் மறுபடியும் கோஹினூர் இந்திய வந்து சேர்ந்தது.ரஞ்சித் சிங் இறந்த பிறகு வைரம் அவர் மகன் தலிப் சிங் கையில் சென்றது. பின்பு ஈஸ்ட் இந்திய கம்பெனி கையில் பஞ்சாப் வீழ்ந்தது. அதன் பிறகு கோஹினூர் பிரிடிஷ் கஜானாவில் சென்று விட்டது. விக்டோரியா வின் மணி முடியை அலங்கரித்து நம் பொக்கிஷமே.
கோஹினூர்கு உள்ள சாபம் என்று சொல்லப்படும் ஒன்று, ஒருவர் கைக்கு சென்று 10-25 வருடங்களுக்கு பிறகு அதை தூய்மையாக வைக்காதவர்களுக்கு நாடு,குடும்பம் என அனைத்தையும் இழக்க நேரிடும் என்றும்,பெண்கள் கைகளில் தான் அது நிலைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரங்கள் கூறுபவர்களும் உண்டு. இது ஏதார்த்தமா இல்லை கொஹிநூரின் சாபமா ? அறிவார் இல்லை.
கோஹினூர்க்கு அடுத்தபடியாக ஒர்லோவ் (orlov diamonds) இன்று ரஷ்யன் மணிமுடியில் இருக்கும் சொத்து இந்தியாவின் உடையது. இந்த ஒர்லோவ் வைரம் ஒரு காலத்தில் சயன கோலம் கொண்ட எம்பெருமான் ஸ்ரீ ரங்க நாதருடைய கண்கள்.பிரெஞ்சு வீரன் ஒருவனால் திருடப் பட்டு ,இன்று அது இருக்கும் இடமோ மாஸ்கோ.
![]() |
பிரிட்டிஷ் மணிமுடியை அலங்கரிக்கும் கோஹினூர். |
![]() |
ஒர்லோவ் வைரம் (ரங்கநாதரின் கண்கள் ) |
Comments
Post a Comment