Skip to main content

படித்ததில் பிடித்தது

ஊர் சுற்றி ஒரு காலத்தில்
இன்று நானப்படியில்லை,
பேர் பெற்ற தலங்கள் நூறு
போகாமல் விட்டதில்லை.
துணையென யாருமில்லை.
எவருதவியும் கேட்டதில்லை.
நதிகளின் தீரம் அலசி
கோட்டைகள் ஏறியிரங்கி
போர் நடந்த வெளிகள்கண்டு
விம்மியே நின்றிருப்பேன்.
அரமணை வாசல் தோட்டம்
மலைப்படி கோவில்குளங்கள்
அன்றிருந்த ராஜபாட்டை
அழியாத சிற்பக் கூடம்
இவையெல்லாம் விருப்பக்கணக்கு
மனிதரே வியப்பு எனக்கு.
மனிதரை அறிந்து கொள்ள
சரித்திரம் படிக்க வேணும்
தன் கால் இடராதிருக்க
மற்றவர் பாதை வேணும்.
அவனழிந்தது போண்ணாலென்றால்
என் காமம் பம்மியிருக்கும்.
புத்தகச் செருக்குயென்றால்
என் புத்தி அடக்கம்கொள்ளும்.
சிற்பத்தில் பொறுமை கண்டு
என் படைப்புக் கூர்மையாகும்.
அரண்மனை அகலம் கண்டு
அவனெங்கே என்று தேடும்
அத்தனையும் மண்ணாய்போக
அலட்டலகள் யாவும் அபத்தம்
உழைப்பதை மேம்படுத்தி
உயர்வேதும் விரும்பிடாது
என் கடன் பணியேயென்று
இருத்தலோர் தனித்தசுகமே.
காலத்தின் கோலம்கண்டால்
வாய்விட்டுச் சிரிக்கத்தோன்றும்
சிலசமயம் துக்கம் பெருகி
கண்ணீரும் தானாய் வழியும்
நிகழ்காலம் கடந்த காலம்
எதிர்காலம் மூன்றுக்குள்ளே
இருப்பதே மனிதக் கூட்டம்.
இதை மீறவே முடியாதையா
சரித்திரம் தெளியத் தெளிய
நிகழ்காலம் உறுதியாகும்
நிகழ்நேரம் உறுதிப்பட்டால்
எதிர்காலம் இடராதிருக்கும்
எதுவுமே நிரந்தரமில்லை
எல்லாமும் முடியுமோர் நாள்
என்பதை தெளிந்து கொள்ள
எவரோடும் சண்டையில்லை
கருத்தினை அழிக்கும்காதல்
மண் மொழி ஆவேசங்கள்
கைகாசு செருகதிகாரம்
கொண்டவர் நிற்பதில்லை
கலையினை மேம்படுத்திக்
கடவுளைத் தேடிய எங்கும்
மனிதரே இங்கு நின்றார்
அவரையும் காலம் விழுங்கும்
புகழ்ச்சியை விரும்பாத
மனிதரே இல்லை யென்றார்
தவறில்லை உண்மைதானே
மனிதரின் தன்மைதானே
இருப்பினும் மூன்றாம் நதிபோல்
இருப்பதறியாதோட அது
வருத்தங்கள் தறாத பெருமை
வன்முறை சிறிதுமில்லை
நான் படைப்பவன்
என் பேர் இறைவன்
எனச் சொன்னவன் வேதவித்து
தமிழரின் அழியாச் சொத்து
இது கர்வத்தின் வெளிப்பாடல்ல
உறுதியின் அலட்சியமாகும்
சரித்திரம் அறிந்த மனிதர்
சாதனை செய்து போவார்
அது சாதனை என்றறியாத்தன்மை
அகந்தையே இல்லாமனசு.
நல்லதைப் புரிந்து கொள்வீர்
சரித்திரம் படிக்கத் துவங்கி.
படிப்பென்றால் புத்தகமல்ல
கணிணியைச் சொறிவதல்ல
துணைக்கென வைத்துக் கொண்டு
நேரடிச் சுற்றுப் பயணம்
பல திக்கும் கொள்வதாலே
பயன்பெறும் உமது வாழ்வு
இப்போது போவதில்லை
முன்பின்னாய் அலைவதில்லை
போனதை மனதில் வைத்து
எழுதுதல் தனித்த சுகமே
சரித்திரம் பெரிதும் விரும்பும்
நண்பர்கள் கூட்டம் பெருகும்
தமிழன்னை உதவி செய்ய
நானிங்கு சரித்திரமானால்.
_எழுத்தாளர் பாலகுமாரனின் முகநூல் பக்கத்தில் இருந்து 

Comments

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

அத்தியாயம் 3

“ யார் நீ ?” கம்பீரமாக வந்தது கேள்வி . தோற்றத்துக்குரிய வீரமும் , தோரணையும் சற்று கூட பிசக வில்லை . அவள் நின்ற தோரணையே அவள் சாதாரண பெண் அல்ல என்பதைக் காட்டியது . சோழர்களைப் பற்றி ஆயிரம் தான் படித்திருந்தாலும் இவளை பார்த்த உடன் ‘ அப்பப்பா , பெண்களுக்கே இவ்வளவு வீரம் என்றால் இது உண்மையிலே புலி வம்சம் தான் ‘ என்ற எண்ணம் எனக்கு உதித்தது . மதிப்பு நிறைந்த விழிகளை அவள் கயல் விழிகளின் மேல் நாட்டியதும் , நினைவு தெளிந்தவன் போல் பேசத் துவங்கினேன் . “ என் பெயர் திவாகரவர்தன் . தங்களின் வீரத்தைக் கண்டு , உங்களை பாராட்டாமல் இருக்க இயலவில்லை . அதற்ககுள் இவர்கள் ...” “ வர்தனர் பரம்பரையோ ? வடக்கே உடுக்கும் உடுப்பு இதுவல்லவே . நீ பாரத தேசத்தவன் போல் இருக்கிறாய் . ஆனால் ஆங்கிலேயர் உடுப்பில் இருகிறாயே ?” “ நான் தமிழன்தான் . 1500 வருடம் காலப் பின் நோக்கில் வந்துள்ளேன் .” அவள் சிரித்துக் கொண்டே “ இளைஞரே , இதெல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள் . இது சோழ நாடு . போர் காலம் வேறு . பத்திராமாக ஊர் போ...

வரலாற்றுப் புத்தகத்துக்குள்

வரலாறா?!? அதை பத்தாம் வகுப்பு புத்தகத்தோட மூட்டை கட்டிட்டோமே! இந்த தலைமுறையினர் பதில். அசோகர் மரம் நட்டதும்,காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது மட்டும் தான் நமக்கு நெனவு இருக்கு.விஞ்ஞானம் எவ்வளவு முக்கியமோ,வரலாறும் அவ்வளவு முக்கியமே.இந்த காலகட்டத்தில், வரலாற்றை வருடங்கள் கொண்ட பெட்டகமாகவே பார்க்கிறோம். ஆனால் வரலாறு என்பது ஓர் உணர்வு. நாம் வாழும் இந்த மண்ணில் ஆயிரக்கணக்கான சாம்ராஜ்யங்களும், லட்சக்கணக்கான மன்னரகளும்,பல கலாச்சாரங்களும், நாகரீகங்களும் தோன்றி மறைந்திருக்கிறன. இப்பொழுது இந்தியா வல்லரசு நாடுகளில் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம், விஞ்ஞானத்தில் ஜப்பானுக்கு நிகரில்லாமலிருக்கலாம். ஆனால் அன்றோ, உலகத்தில் இருந்த அத்தனை அரசர்களுக்கும் இந்தியாவை ஆட்சி செய்வதே கனவாக இருந்தது. எங்கும் இல்லா செழிப்பு,வணிகம், மக்கள், கலை.இவைதான் இந்தியா மீது படையெடுக்க முக்கிய காரணங்களாக இருந்தன.தொழில்நுட்பங்களிலும் முதன்மையானவர்களாகவே இருந்து இருக்கிரோம்.தொழில்நுட்பம் இன்றியா ராஜேந்திர சோழர் கடாரம் வரை படை எடுத்தார்?! விஞ்ஞானம் இல்லாமலா தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அதே கம்பீரத்தோடு நிற்கிறத...