Skip to main content

கலி யுக வரதனே கிருஷ்ணா கிருஷ்ணா

இன்றைய காலக் கட்டத்தில் நாம் அடிக்கடி கேட்கும் ஒன்று "கலி காலம் ". அப்படி என்றால் என்ன ? இது கலியுகம் என்றால் வேறு யுகங்கள் இருக்குமா?/இருந்தது உண்டா ? இதற்கான பதில் இந்து மத நூல் ஆனா ஸ்ரீமத் பாகவதத்தில் உண்டு.

இந்துக் கலாச்சாரத்தின் படி யுகங்கள் நான்கு உண்டு. முதலாவது சத்ய யுகம்: சத்தியமும் தர்மமும் நிறைந்து இருந்தது.விஷ்ணு முதல் நான்கு அவதாரங்கள்  எடுத்த யுகம்.அடுத்து திரேதா யுகம்: பொதுவாக தர்மத்தை நான்கு கால்களை உடைய எருதாகக் கொண்டால்,இந்த திரேதா யுகத்தில் 3 கால்கள் மட்டுமே. வாமன, பரசுராமன், ராம அவதாரங்களை விஷ்ணு எடுத்த யுகம்.

அடுத்து துவாப்பர (Dwapara) யுகம். இதில் தர்மத்துக்கு 2 கால்கள். கிருஷ்ணன் அவதரித்த யுகம். பாகவத புராணத்தின் படி இந்த யுகம் 864000 வருடங்கள் நீடித்தது. குருக்க்ஷேத்ரப் போர் முடிந்து கிருஷ்ணன் இந்த பூவுலகை விட்டு சென்ற உடனே கலி யுகம் தொடங்கியது.
மகாபாரதத்தில், வில் வித்தைக்கு பெயர் போன அர்ஜூனனுடைய மகன் அபிமன்யூ. வீரத்துக்கு பெயர் போன அபிமன்யூ சக்ரவ்யூகத்தில் இறந்த போது, அவன் மனைவி உத்ரா கருவுற்றிருந்தால். அந்த கரு தான் பின் நாளில் பரிக்ஷித் மகாராஜாவாக வளர்ந்தது. இங்கே இருந்து தான் கலியுகம் தொடங்குகிறது. கலியுகம் எப்படி பட்டத்து என்று பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, மக்கள் பொருமை இழந்து, அதர்ம காரியங்களில் ஈடுபட்டு
உடல் மற்றும் மன வலிமை இழந்து தவிப்பார்கள். பொருள்,பணம் ஆகியவை வைத்தே ஒருவன் மதிக்கப்பட பெறுவான். தர்மமும், நீதியும் விலைபோகும். காமம் ஒங்க அன்பு தாழும். அந்தணர்கள் நெறி தவருவர். ஒருவரின் ஆன்மீக சிந்தனைகள் வெளித்தோற்றமாகும். பணம் இல்லாதவன் புனிதமற்றவன் ஆவான். வயிற்றை நிரப்புவதே வாழ்க்கையின் அடிப்படை ஆகும். புனித ஷேத்ரங்கள் சுற்றுலா மயமாகும். கலப்பட மக்கள் கூட்டமே பூமியில் இருப்பர். அரசர்கள் கள்வர்கள் ஆவர். அதிக அளவிலான பஞ்சத்தாலும்,வரியினாலும் மக்கள் கஷ்டப்படுவர். பசி,தாகம், தீரா நோய் என்று உயிர் இழப்புக்கள் அதிகமாகும்.அதிக பட்ச வாழும் வயது ஐம்பதாக இருக்கும். இந்த யுகம் முடியும் போது குரோதம், காமம், வன்முறை, கள்ளம் என்று அனைத்தும் கொண்டு முடியும்.
கலியுகத்தில் இருக்கும் ஒரே நல்ல விஷயம்,வேறு யுகத்தில் கடுந்தவம் இருந்து வரும் அனைத்து பலன்களும் இந்த யுகத்தில் விஷ்ணு நாமம் சொன்னவர்க்கு உண்டு.

இந்த கலியுகத்தில் தான் விஷ்ணு கல்கியாக அவதரிப்பார். கல்கி அவதாரத்திற்கு பிறகு பூமி சத்திய பாதையில் செல்லும்.கல்கி அவதாரத்தின் போது விஷ்ணுவின் பிறப்பிடம், தாய் தந்தை பெயர், நட்சத்திரம் என அனைத்தும் பாகவத புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இவையெல்லாம் ஆன்மீகம்.. நமக்கு எதற்கு என்று யோசிக்கும் விஞ்ஞான இளைஞர்களே...! அன்று ஒரு 65 வயது முதிர்ந்தவர்க்கு இருந்த மன அழுத்தம், இன்று 15 வயது சிறுவனுக்கு உண்டு. வரும் காலங்களில் இது இன்னும் மோசமானதாகவே இருக்கும். வாழ்க்கையை மேம்படுத்தும் நூல்களை படியுங்கள். நமது இதிகாசங்களும் புராணங்களும் கட்டுக்கதைகள் அல்ல. அவை வாழ்வியல் நூல்கள். கடவுள் நம்பிக்கை விட்டு வழுவுவது நவநாகரீகம் அல்ல!

Reference :Canto 12: The Age of Deterioration
Chapter 2: The Symptoms of Kali-yuga
Śrīmad Bhāgavatam

Comments

  1. உலகில் எழுதப்பட்ட நூல்களில் அதிகம் விமர்சனத்திற்கு உட்பட்டவை சமயநூல்கள்.

    அதை வாசித்து - மதிப்போர் பொருட்டு அதன் புனித தன்மை மலரும் ( மாறும் ) தான்.

    இந்து மதம் மட்டும் அல்ல !
    உலகில் எல்லா மதங்களும். யாரோ ஒருவர் தங்களின் மதத்தையும் ; மதம் சார்ந்த மக்களையும் ஏற்றம் அடையசெய்வார் என நம்பிக்கை கொண்டுள்ளனர் ! - இஸ்லாமியர்கள் - உமர் ஆட்சியை ; யூதர்கள் மீண்டும் மோசஸ் போன்றதொரு ஒரு தேவதூதன் வருவான் எனவும் ! ; கிருத்துவர்கள் - மீண்டும் தேவன் இம்மண்ணில் பிறப்பார் எனவும் நம்புவது போல -
    இந்துக்கள் கிருஷ்ணனுக்காக காத்துகொண்டிருக்கிறார்கள் -


    கீதை போல பல எல்லா மதத்தின் நூல்களும் கடவுள் இவ்வுலகில் மீண்டும் பிறப்பார் என்றே சொல்கிறது !

    தோன்றி மறைந்த நாகரீகங்களும் அதில் வாழ்ந்த மனிதர்களும் உரைத்த கூற்றுகள் உண்டு ; மாயன் ; நான்ச்டர்டோமஸ் ; என பலரும் நாம் வாழும் உலகின் எதிர்காலத்தை பற்றி...

    இனி இந்த உலகம் அதுக்கு சரி பட்டு வராது என்பது போல் தான் கூறி மறைத்திருக்கிறார்கள் !!

    இன்னும் சொல்ல போனால் ஒவ்வொருவரும் !!

    தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு பின் வரும் எவரும் நல்லா வாழ்ந்திடக்கூடாது என்பது போலவே சொல்லிசென்றிருக்கிறார்கள் -

    நாமே நம் சந்ததியினருக்கு என்ன கற்றுகொடுக்கிறோம் ?

    அறம் - என்ற ஒன்றை பின்பற்ற கற்றுகொடுக்கிறோமா ?

    உன் வாழ்கையை மட்டும் நீ வாழு..

    நான் வாழ யாரும் அழியலாம் ?

    ஈகை ? - சொல் வழக்கத்தில் ஒழிந்தது போல அப்பண்பும் ஒழிந்தது நம்மவர்களிடையே !
    இப்படி

    நாளிகை ஒன்று முடிய அதற்க்கு நிகராய் நாட்களாய் நிகழ்கிறது மாற்றங்கள்

    ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வை வாழ ஆரம்பிக்கும் போது இருக்கும் உலகத்திற்கும் அந்த வாழ்வு முடிவுபெறும் போது இருக்கும் உலகத்திற்கும் இடைவெளியில் அவன் உணர்ந்ததையே பதிவிடுகிறான் !!

    அவை முன்பைப்போல் இல்லை எனகொள்கிறான் ; அவன் அந்நீட்சில் எதிர்வரும் காலத்தை புனைந்து பதிவிடும் எண்ணங்கள் தான் நூல்கள் அதில் தெய்வீக தன்மை கொண்டவை சமய நூல்கள்..
    அந்நூல்கள் கூறும் அறநெறியை பின்பற்றுவோம் - அதே போல அவை உரைக்கும் பழமைவாத வாத கருத்துக்களை தூற்றுவோம் -

    1) அந்தணன் நெறி தவறுவான் ! - தெய்வமே நெறிமுறைகளை தவறியதாய் பலகதைகள் உண்டு அப்படி இருக்கையில் அந்தணன் என்பது ஒரு குலம் அந்தணனும் மானுடன் தானே ? அவன் நெறி தவறுவதில் என்ன ஆச்சர்யங்கள் ?
    மக்கள் என்ற பார்வையை விடுத்து ஒரு குலத்தினவன் மனிதனிடத்தில் இருந்தில் மனிதனுக்கு உயர்வாய் பொருள் கொள்வது சரி தானா ?

    2) - கலப்பட மக்கள் கூடமே இருக்கும் !

    என்றுமே மக்கள் கலந்தே இருந்துள்ளனர் குலங்களாலும் , சமயங்களாலும் , அச்சமயங்களின் உட்பிரிவாலும் ( சைவம் - வைணவம் ) மக்கள் என்ற சொல்லிற்கு முன்னால் வரும் கலப்படம் என்ற சொல் ஏற்புடையதா ?
    மனிதனை மதத்தாலும் குலத்தாலும் பிரிக்கும் சொல்லாகவே அவை கொள்ளப்படும்.

    இவ்விரு வாக்கியங்களும் இன்றல்ல இனி எக்காலத்திலும் மனிதனுக்கு ஏற்புடையவை அல்ல !

    குறிப்பு : நான் இந்து மதத்திற்கோ அல்லது கிருஷ்ணருக்கோ எதிரானவன் அல்ல..

    பிரிவினைக்கும் - வேற்றுமைக்கும் எதிரானவன் !

    மற்றபடி நானும் - பாற்கடலில் ஆடிய பின்னும் உன் வண்ணம் மாறவில்லை இன்னும்.. என ரசிக்கும் ஓர் அரைகுறை ஆத்தீகன் தான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு : மகாகவியின் உன்னதமான வரி இது. குரோதத்துக்கும் ரௌதிரதுக்கும் சிறிய வித்யாசம் மட்டுமே. அது எங்கு எப்பொழுது யார் மீது என்ற கேள்விகளைப் பொருத்தது.ரௌத்திரம் என்ற ஒன்றை பல இடங்களில் இந்த மனித சமூகம் மறந்து விடுகிறது. இதிகாசங்களில் தொடங்கி இன்று வரை மனிதன் ரௌத்திரம் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு நேர்ந்தால் அநீதி; பிறருக்கு நேர்ந்தால் விதி என்று என்னும் மனித குல மாணிக்கங்கள்  நாம். சமுகத்தில் நடக்கும் அநீதி கண்டு கோபம் கொள்வோர் எத்தனை பேர் ?நாடு என்ன நிலையில் இருந்தால் என்ன? யாரு எப்படி போன என்ன? எனக்குன்னு வர வரைக்கும் நான்  சும்மா தன இருப்பேன்.இப்படி பட்ட எண்ணம் தான் இன்று மேலோங்கி நிற்கிறது. இன்று மட்டும் அல்ல புண்ணிய காவியம் ஆனா மகாபாரதத்தில் தொடங்கி இன்று வரை இருக்கும் சாமானிய மக்கள் மன நிலை. அன்று அந்த துருபதன் மகளும்  ,வேள்வியில் உதித்தவளும் ஆனா திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதி கண்டு எழுந்தவர்கள் எத்தனை பேர்?   இதுவே. பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறுவது : "நெட்டை மரங்களென நின்று புலம்பினார்  பெட்டை புலம்பல் பிறர்க்குத் துணை...

சந்தர்பங்களால் ஆனதே வாழ்கை !

' silence and smile are two powerful tools '  என்று ஒரு அழகான ஆங்கில பழமொழி உண்டு.  ஒரு மனிதனுக்கு சிரிப்பும் அமைதியும் மிக முக்கியம். அது  எப்படி,எப்பொழுது ,எங்கு வெளிப்படுகிறது என்பது ஒரு தனி நபரைப் பொருத்தே. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க மறந்தால் அது ராமாயணம்.   சிரிக்கக்கூடாத இடத்தில் மறந்து சிரித்தால் அது மகாபாரதம். மகாபாரதப் போருக்கே வித்தாக அமைந்தது அந்த தப்பான நேரத்திலும் இடத்திலும் ஏற்பட்ட சிரிப்புதான்.  பாஞ்சாலி  என்று அழைக்கப்பட்ட திரௌபதி சிரித்த அந்த சிரிப்பு தான் மகாபாரதத்தின் அடிப்படை. ராஜசூரியா யாகம் நடந்த அந்த நாளில்  கௌரவர்களில் ஒருவரான துரியோதனன்  கீழே விழுந்ததை பார்த்து திரௌபதி சிரித்தாள். ஏற்கனவே கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெறுகியது. அது  மட்டும் அல்லாது,திரௌபதியின் சுயம்வரத்தன்று கர்ணனை இழிவுபடுத்தியது எவ்வளவு பிசகு என்று திரௌபதி முன்னாலே அறிந்து இருந்தால் அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பாள். இந்த  இரண்டு சிரிப்பும் இல்லாம...