Skip to main content

இ(ந்)து மதம் அல்ல கலாச்சாரம்

மதம் என்பது ஒரு மனிதனை கட்டுக்கோப்பாக வைக்க மட்டும் இன்றி அவன் வாழ்வை செம்மை படுத்தும் நெறிகளைகயும்  கொடுக்க வல்லது. உலகில் உள்ள எல்லா மதங்களும் சொல்லும் விஷயம் ஏரத்  தாள ஒன்றே. அதில் பல நூற்றாண்டுக்கு முன்பு தோன்றிய இந்து மதம் ,ஒரு நாகரீக மாற்றத்தை மட்டுமின்றி ஒரு அற்புதமான கலாசாரத்தையும் தந்தது. சைவம்,வைணவம், ஷக்தி வழிபாட்டு என்று பல உட்பிரிவுகளைக் கொண்டது. இந்து மதத்தை ஒரு அறிவியல் சார்ந்த விஷயமாக பார்ப்பதே உவப்பு. இந்து மதம் கொடுத்த யோகிகளும் ஞாநிகளும் ஏராளம். இந்து கோயில்களை எடுத்துக்கொள்வோம், கருவறை அமைந்த மூலஸ்தானத்தில்தான் காந்த அலைகளின் தாக்கம் அதிகம். கருவரையில், வைக்கப்படும் செப்பு தகடுகள் இந்த காந்த அலைகளை அதிகப்படுத்தும்.இந்த காரணம் கருதிதான் நாம் கோயிலுக்குச் செல்லும் போது கோயிலை சுற்றி வருகிறோம்.இதே போல மூட நம்பிக்கை என்று இந்த கால மனிதர்கள் கூறும் பல விஷயங்களுக்குப் பின்னால் அறிவியல் சார்ந்த பல விளக்கங்கள் கொடுக்கலாம்.நம் முன்னோர்கள் கணித்து வைத்த பஞ்சாங்கம் ,ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு அப்பால் வர இருக்கும் பௌர்ணமி, அம்மாவசை ஆகியவற்றை சரியாக சொல்கிறதே?எப்படி ?மனிதன் இப்போதுதான் செயற்கைகோள்கள் மூலம் விண்வெளி ஆராட்சி செய்யத் துவங்கினான். ஆனால் நம் இந்து கோயில்களில் நவகிரக வழிபாடு வந்த கால கட்டம் என்ன என்பதை நாம் மறந்து விட கூடாது.ஒரு கோவில் என்பது நாகரீக வெளிப்பாடு.கிரக பலன்களை வைத்து ஜோசியம் சொல்லும் கலையும் நம் இந்துக்களுக்கே உரித்து.அன்று சித்தர்களுக்கு இருந்த மன வலிமையும் சக்தியும் இன்று அறிவியலில் திலைக்கும் நமக்கு ஏன் இல்லை? நாம் பல புராணங்களில் கேள்வி படும் விஷயங்கள், 'இது எப்படி சாத்தியம்?' என்று நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தத்தான் செய்யும்.மகாபாரதத்தில் , அர்சுனனுக்காக கிருஷ்ணர் சூரியனை மறைத்தார் என்று கதை கேள்வி பட்ட போது ,இது வெறும் கட்டுக் கதை என்றே சொல்லத் தோணலாம்.இப்படி யோசித்து பார்போம்,அந்த கால மனிதர்களிடம் போய் நம் வலைதளங்களை பற்றியும்,நமது கணினி பற்றியும் கூறினால் சத்தியமாக அவர்களுக்கு எதும் புரிந்திருக்காது.அதே போல தான் நமக்கும்.மன அழுத்தம் என்று சொல்லப் படும் 'stress' எந்த ஞானிக்கும் இருந்ததில்லை.நாம் அறிவியலின் கை போமைகளாய் மாறிப் போனதாலோ என்னவோ,இந்த மனோ ஷக்தி பற்றி எதும் தெரியாமலே போய் விட்டது.இவ்வளவு பெருமைகளை கொண்ட இந்து மதம் ஆயிரம் வருடங்களில்  அதன் வலிவை இழக்க என்ன காரணம்?சித்தர்களும்,யோகிகளும்,ஞானிகளும் எங்கே? அப்படி இதெல்லாம் சிதையும் வண்ணம் என்ன நடந்து? துருக்கர்களின் படையெடுப்பால் வந்த இஸ்லாமியர்களும், வெள்ளைக்காரர்களால் வந்த கிருஸ்துவ மதமும்,நம் கலாச்சாரத்தை மாற்றத்  துவங்கியது. முஹமது கஜினி கொள்ளை அடித்து சென்ற செல்வங்கள் அனைத்தும் இந்து கோயில்களில் இருந்தே. கொள்ளை அடித்து சென்று இருந்தாலும் பரவா இல்லை,அதை தரைமட்டமாக்கி சென்றானே? சோம்நாத் கோயில் இந்துக்களின் சொத்து.அதற்கு பிறகு வந்த அத்தனை இஸ்லாமிய அரசர்களும் இவ்வாரே.அலாவுதீன் கில்ஜி போன்ற மிக கொடுமையான ஆட்சியாளர்களால் இந்து மதம் சரியத் துவங்கியது.வெள்ளையனே வெளியேறு என்று பிற்பாடு கொடுத்த குரலை ,துருக்கனே வெளியேறு என்று வட இந்திய அரசர்கள் முன்பே  கொடுத்து இருந்தால்,இன்று இந்தியாவை போல் செல்வ செழிப்பு உள்ள பூமி இந்த உலகத்தில் இருந்திருக்காது.வெள்ளைக்காரர்கலாவது பரவாயில்லை , இந்தியாவுக்கு பல தொழில்நுட்பங்களை அறிமுக படுத்தினார்கள்.ஆனால் நம் சுல்தன்களோ,கோயில்களை இடிப்பதிலேய குறியாக இருந்தார்கள்.இன்று மத பிரச்சனைகள் பல வற்றுக்கும் காரணம் அரசியல் மதத்தோடு கலந்ததே. இந்து மதத்தின் பெருமையை உலகம் உணரத் தொடங்கி விட்டும் கூட இந்துக்கள் பல பேர் உணர்வதில்லை .

நாகரீக மனிதர்களே ..பணத்துக்காக வாழ்க்கையை விர்க்காதீர்கள்.  நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை சற்று வாழ ஆரம்பியுங்கள். நவ  நாகரீகம் என்ற பெயரில் நம் கலாச்சாரத்தை அழித்து விடாதீர்கள். இந்து மதம் மூட நம்பிக்கைகளின் கூடாரம் என்ற நினைப்பை விட்டு விடுங்கள். அது ஒரு அறிவியல் பெட்டகம் என்பதை மறந்து விடாதீர்கள்.

Comments

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

அத்தியாயம் 3

“ யார் நீ ?” கம்பீரமாக வந்தது கேள்வி . தோற்றத்துக்குரிய வீரமும் , தோரணையும் சற்று கூட பிசக வில்லை . அவள் நின்ற தோரணையே அவள் சாதாரண பெண் அல்ல என்பதைக் காட்டியது . சோழர்களைப் பற்றி ஆயிரம் தான் படித்திருந்தாலும் இவளை பார்த்த உடன் ‘ அப்பப்பா , பெண்களுக்கே இவ்வளவு வீரம் என்றால் இது உண்மையிலே புலி வம்சம் தான் ‘ என்ற எண்ணம் எனக்கு உதித்தது . மதிப்பு நிறைந்த விழிகளை அவள் கயல் விழிகளின் மேல் நாட்டியதும் , நினைவு தெளிந்தவன் போல் பேசத் துவங்கினேன் . “ என் பெயர் திவாகரவர்தன் . தங்களின் வீரத்தைக் கண்டு , உங்களை பாராட்டாமல் இருக்க இயலவில்லை . அதற்ககுள் இவர்கள் ...” “ வர்தனர் பரம்பரையோ ? வடக்கே உடுக்கும் உடுப்பு இதுவல்லவே . நீ பாரத தேசத்தவன் போல் இருக்கிறாய் . ஆனால் ஆங்கிலேயர் உடுப்பில் இருகிறாயே ?” “ நான் தமிழன்தான் . 1500 வருடம் காலப் பின் நோக்கில் வந்துள்ளேன் .” அவள் சிரித்துக் கொண்டே “ இளைஞரே , இதெல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள் . இது சோழ நாடு . போர் காலம் வேறு . பத்திராமாக ஊர் போ...

சந்தர்பங்களால் ஆனதே வாழ்கை !

' silence and smile are two powerful tools '  என்று ஒரு அழகான ஆங்கில பழமொழி உண்டு.  ஒரு மனிதனுக்கு சிரிப்பும் அமைதியும் மிக முக்கியம். அது  எப்படி,எப்பொழுது ,எங்கு வெளிப்படுகிறது என்பது ஒரு தனி நபரைப் பொருத்தே. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க மறந்தால் அது ராமாயணம்.   சிரிக்கக்கூடாத இடத்தில் மறந்து சிரித்தால் அது மகாபாரதம். மகாபாரதப் போருக்கே வித்தாக அமைந்தது அந்த தப்பான நேரத்திலும் இடத்திலும் ஏற்பட்ட சிரிப்புதான்.  பாஞ்சாலி  என்று அழைக்கப்பட்ட திரௌபதி சிரித்த அந்த சிரிப்பு தான் மகாபாரதத்தின் அடிப்படை. ராஜசூரியா யாகம் நடந்த அந்த நாளில்  கௌரவர்களில் ஒருவரான துரியோதனன்  கீழே விழுந்ததை பார்த்து திரௌபதி சிரித்தாள். ஏற்கனவே கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெறுகியது. அது  மட்டும் அல்லாது,திரௌபதியின் சுயம்வரத்தன்று கர்ணனை இழிவுபடுத்தியது எவ்வளவு பிசகு என்று திரௌபதி முன்னாலே அறிந்து இருந்தால் அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பாள். இந்த  இரண்டு சிரிப்பும் இல்லாம...