காலச் சக்ரத்தின் சுழற்சியில் நாம் அனைவரும் மிகச் சிறிய அங்கங்கள். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில் பூமி இன்றில்லை. இன்று போல பல கண்டங்களோ ,நாடுகளோ அன்று இல்லை. ஹோமொசபியன்ஸ் என்று அழைக்கப்படும் மனித இனம் உருவாகவே பல்லாயிரம் ஆண்டுகள் ஆயிற்று. அதற்குப் பிறகு மொழி ,நாகரீகம் என்று படிப்படியாக வளரத் தொடங்கியது. பின்பு மனிதன் சமூகமாக வாழ கற்றுக் கொண்டான்.பின்பு மற்ற சமூகத்தார் நிலத்தை ஆக்ரமிக்க தொடங்கினான். தங்களை தற்காத்துக் கொள்ளவும் ,தங்களை விட வலு இல்லாத சமூகத்தை அடிமை படுத்தவும் எண்ணினார்கள். நாகரீக குழுமங்களாக இருந்த மக்கள் சாம்ராஜ்ய வட்டங்களுக்கு மாறினார்கள்.தங்களை காக்க ஒரு தலைமை இருந்ததால் மக்கள் சுக வாழ்வுக்கு பழக்கப்பட்டார்கள்.அனால் இந்த கால கட்டத்திலும் போர் என்பது இருந்தது.தற்காப்புக்கு போர் என்ற நிலமை மாறி,தங்கள் வலுவை அனைவருக்கும் காட்ட வேண்டும் என்ற எண்ணமும், பொருட்கள் பல வற்றை கொல்லை அடிக்கும் ஆவலோடுமே போர் நடந்தது.சர்வாதிகாரம் முடிந்த பிறகு சுதந்திர தேசங்கள் தோன்ற தொடங்கின.நாகரீகம் ,நவநாகரீகமாக மாறிற்று. ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதே மண்ணில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் , அவர்கள் பேசிய தமிழ் வேறு,அவர்கள் வாழ்ந்த வாழ்கை வேறு,போர் முறைகள் வேறு. முகலாயர்களை எடுத்துக் கொள்ளுங்கள் ;வாழ்கையை சுக போகத்துடன் வாழ்ந்தவர்கள்.அந்த சந்ததியில் வந்தவர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை.எல்லாம் காலத்தின் ஆட்டம் தான்.எது உயருமோ அது தாழும்;எது தாழுமோ அது உயரும்.இது காலத்தின் விதி.பல கோடி மன்னர்களும்,சாம்ரஜியங்களும் தோன்றி மறைந்துவிட்டன. ஆனால் காலம் கடந்தும் பேசு பெரும் சக்ரவர்த்திகள் மிக சொர்ப்பம்.காலம் அனைத்தையும் விழுங்கவல்லது. இன்று போட்டி போட்டுக் கொண்டு எங்கே ஓடுகிறோம் என்று கூட அறியாமல் ஓடிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். இன்னும் நூறு ஆண்டு சுழன்றால் நாம் யார் என்று இந்த பூமி கூட அறியாது.அவ்வளவு ஏன் ,நாலு தலைமுறை தாண்டினாள் நம் சந்ததிகளுக்கே நம்மை தெரியாது. இதை அறியாமல் பணம், புகழ் என்று தேடி மனித அடையாளங்களையும் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேட்ராப்பாலிட்டன் என்று அழைக்கப்படும் இந்த நகரங்களில் (நரகங்களில்)வாழ்பவர்களை பாருங்கள்.சிரிக்க கூட நேரம் இல்லாமல் பர பரப்பாய் இயங்கும் மக்கள் கூட்டம். எல்லாவற்றுக்கும் ஆசை பட்டு ஓடி சந்தோஷத்தையும் ,நிம்மதியையும் தொலைத்த மக்களாய் நாம் வாழ்கிறோம். தொழில்நுட்ப வளர்சியின் உச்சத்தில் இருக்கும் நமக்கு மனிதர்களோடு முரண்பாடு ;இயந்திரங்களோடு மட்டும் உடன்பாடு.சந்தோஷத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு வாழுங்கள்.காரணம் இன்றி சிறு பிள்ளையைப் போல் சந்தோஷமாக இருங்கள்.இந்த நிலை இல்லா உலகில் மகிழ்ச்சி மட்டுமே நிலையானது.மனிதர்களை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நொடியிலும் புன்னகைக்க கற்றுக்கொள்ளுங்கள்.உங்கள் சோகங்களையும் காலம் விழுங்கி விடும்.காலம் நம் மனதை வசப்படுத்த வல்லது. உங்கள் குறிக்கோளை நோக்கி சந்தோஷத்துடன் அடி எடுத்து வையுங்கள்.
காலம் கடந்து நம் பெயர்கள் நிலைக்குமா??
காலம் பதில் சொல்லட்டும் ......
Comments
Post a Comment