ஒரு மொழிக்கு இன்றி அமையா விஷயம் அந்த மொழியின் எழுத்துக்களே. எழுத்துக்கள் என்று நான் குறிப்பிடுவது அந்த மொழியில் வெளி வந்த படைப்புக்களை. ஒரு சமுதாயம் எப்பேர்ப்பட்டது என்று அதன் படைப்புக்களை வைத்தே சொல்லிவிடலாம். எழுத்துக்கள் ஒரு நாகரிகத்தின் வெளிப்பாடு. நம் தமிழ் நாகரீகத்தை எடுத்துக் கொள்வோம். ஆதி கால தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று இன்றைக்கு நம்மால் சொல்ல முடிகிறதே ...எப்படி?? அவர்கள் விட்டு விட்டுப் போன கல்வெட்டுகள்ளும், ஓலைச்சுவடிகளும்,நூல்களும் தான் இதற்கு பதில். சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மதுரை.ஒரு மொழியின் முக்யியத்துவம் அறிந்த நாகரீகத்தின் வெளிப்பாடுகள் நாம். அன்று இருந்த மக்களின் வாழ்வியல்,பொழுது போக்கு, அவர்களை ஆண்ட அரசன் எப்பேர்ப்பட்டவன்,ஒவ்வொரு வர்ண மக்களின் வாழ்கை முறை அனைத்தும் வெளிப்பட்டது எழுத்துக்களால் மட்டுமே. அகநானூறு ,கலித்தொகை ,பொருனராற்றுப்படை ,பெரும்பனராற்றுப்படை , நற்றிணை ,பரிபாடல் ,நெடுநல்வாடை, பட்டினப்பாலை,முல்லைப்பாட்டு, தொல்காப்பியம் :இவை எல்லாம் சங்கத்தமிழ் கொடுத்த சொத்துக்கள். கபிலர், நக்கீரர்,இளங்கோவடிகளில் தொடங்கி இன்று வாலி, வைரமுத்து, பாலகுமாரன் வரை எண்ணற்ற எழுதாலர்களை தோற்றுவித்த மண் இது. அன்று ஒரு கம்பன் இல்லேயேல் அது வால்மீகி ராமயானமாக வடமொழியில் மட்டுமே இருந்திருக்கும். தாய் மொழியில் ஒரு தகவல் வெளி வரும்போது அது பலரை வெகு எழிதில் எட்டிவிடும். எழுத்துக்களில் வெறும் கருத்துக்களையோ,அல்லது வரலாற்று நிகழ்வுகளையோ வெறும் உண்மைகளாக (facts) கொடுத்தால் அது படிப்பவர்களுக்கு ஒரு சுவாரசியத்தை கொடுக்காது. மகாபாரதத்தை ஒரு வரலாறாகவோ, இல்லை நீதிகலகவோ குடுத்து இருந்தால் அது படிப்பவர்களுக்கு அவ்வளவு பிடிப்பாக இருந்திருக்காது. வரலாற்றையும் ,நீதிகளையும்,நெரிகலையும் ,கதாபாத்திறங்கலைப் பற்றிய குறிப்புக்களும் மிக சரியாக அமைந்தனாலேயே
மகாபாரதம் ஈடில்லா மாகாவியமாக திகழ்கிறது. சோழ வரலாற்றை விளக்கும் வகையாக இரண்டு புத்தகங்கள் எடுத்துக்கொள்வோம். ஒன்று: நீலகண்ட சாஸ்த்ரி அவர்களின் புத்தகம். அது சோழர்களை பற்றிய தகவல் களஞ்சியம் தான் என்றாலும் அது படிப்பவர்களுக்கு அவ்வளவு சுவாரசியம் தராது.இதே பொன்னியின் செல்வன் எடுத்துக்கொள்ளுங்கள், சுவாரசியதுக்குப் பஞ்சம் இல்லை. வந்தியதேவனிடம் மயங்காத வாசகர்கள் உண்டோ?கதாபாத்திரங்களின் அனுமானமும் , அவற்றின் போக்கும் பொன்னியின் செல்வன் வெற்றிக்குக் காரணம். வந்தியாதேவர் என்று ஒருவர் இருந்தார் என்பது உண்மை ,அவரது நடை ,உடை ,பாவனைகள் எல்லாம் கற்பனை. நிஜத்தோடு கற்பனை சேரும்போழுதே ஒரு படைப்பு வாசகர் உள்ளதுகுச் செல்கிறது. இதனாலேதான் நம் சிறு வயதுகளில் நீதி நெறிக் கதைகளை நமக்குச் சொன்னார்கள். கதை மட்டும் இன்றி கருத்தும் உள்ளே செல்லும் என்ற நம்பிக்கை தான். சாண்டில்யன் எழுத்து நடையில் இது ஒரு முக்கியமான அங்கம்.கதை தலைவானாக ஒருவனை பாவித்து விடுவது,அதை சுற்றி வரலாற்றயும் சொல்வது. அந்த கதை தலைவனின் காதல்,வீரம் என்று கதை மிக அழகாக போகும். இந்தக் கற்பனை கதாபாத்திரங்களோடு படிப்பவர்களை காதல் வயப்பட வைப்பதே ஒரு சிறந்த எழுத்தாலனுக்கு அழகு. சோழத்தை நான் நேசிக்க காரணம் கல்க்கியும் ,பாலகுமாரனும் மட்டுமே. இதெல்லாம் வரலாறும் ,சமூகமும் சார்ந்த எழுத்துக்கள். காதல்,நட்பு, வாழ்வு,இன்பம்,துன்பம் என்று மனிதர் வாழ்கையில் நடக்கும் விஷயங்களை கவிதை நடையில் கொடுக்கும் கவிஞர்களும் ஒரு பொக்கிஷம். அவர்களுக்கு கற்பனை திறன் மிக மிக அதிகம். ரசனையும் அதிகம். நாம் சாதரணமாக பாக்கும் ஒன்றை ரசனையுடன் பார்ப்பதே ஒரு கவிஞன் மனம். நம் திறன்களையும்,சோகங்களை இறக்கி வைக்க எழுத்து ஒரு வாய்ப்பு. நம் எண்ண ஓட்டங்களின் வெளிப்பாடாக அது அமையும். எழுதுவதற்கு முன்பு நல்ல புத்தகங்களை படியுங்கள்.உங்கள் எண்ண ஓட்டங்களை தெளிவு படுத்திக்கொள்ளுங்கள். வாசகர்களுக்காக எழுதாதீர்கள்; உங்கள் மன நிம்மதிக்காக எழுதுங்கள். உங்கள் படைப்புக் கோட்டைக்கு நீங்களே ராஜா;உங்கள் எண்ணங்களே மந்திரி! வளரட்டும் எழுத்துக்களின் ராஜ்ஜியம்.

Comments
Post a Comment