சோழர்கள்...நம் தமிழக நாகரீகம் வளர வித்துக்களாய் இருந்தவர்கள்.சோழர்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது ராஜ ராஜ சோழன்.ராஜ ராஜ சோழன் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது தஞ்சை பெருவுடையார் கோவில்.ஆனால் எனக்கு வேறு ஒருவரும் நினைவில் வருகிறார்.பஞ்சவன் மாதேவி. அடிப்டையில் தேவரடியாளாக (நாட்டியப் பெண் ) இருந்தவர். ராஜ ராஜ சோழனை மணம் முடித்த பிறகு அரசியல் மற்றும் நிருவாகங்களில் பெறும் பங்கு வகித்தவர். பல போர்களை கண்டவர்.ஒரு அரசரின் மனைவியாக மற்றும் இன்றி சோழ தேசத்தின் மேன்மைக்காக உழைத்தவர். அவள் ராணியாக இருந்து ,சுகபோகங்களை அனுபவித்து மட்டும் போய் இருக்கலாம்.ஆனால் அவள் அப்படி செய்யவில்லை.தனக்கு பிறக்கக் கூடிய குழந்தையால் ராஜேந்திர சோழனுக்கு இளவரசர் பட்டம் கட்ட முடியாமல் போய் விடுமோ என்று பயந்து தன்னை மலடாகிக்கொண்டவள் . ராஜேந்திர சோழர் இவளுக்காக கட்டிய பள்ளிப்படை கோவில் இன்றளவும் பட்டீஸ்வரத்தில் இருப்பதை நாம் காண முடியும்.தன் சொந்தத் தாய் அல்லாவிட்டாலும் ,ராஜேந்திர சோழர் எழுப்பி உள்ள இந்த கோவிலை பார்க்கும் பொழுது அவள் எவ்வளவு உன்னதமான ராணியாக இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அந்த கோவிலில் உட்கார்ந்து சிந்த்தித்தால் அங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தவற்றை நம்மால் உணர இயலும்.ஆனால் அந்த பள்ளிப்படை கோவில் மிக மோசமான நிலைமையில் உள்ளது.நான் சென்ற பொது கோவிலின் சாவியை அருகில் உள்ள கடையில் பெற்று ,கோயில் கதவுகளை திறந்து உள்ளே சென்று பார்த்த பொது,சுற்று சுவர் மட்டுமே மீதம் உள்ளது தெரிந்தது. அருகில் உள்ள பலரை விசாரித்த பொழுது ,அப்படி ஒரு கோவில் இருப்பதாக கூட அவர்களுக்கு தெரியவில்லை. 'சிவன் சொத்து குல நாசம் ' என்று சொல்வார்கள்.அதை அறியாமலே கோவில் நிலத்துக்குள் எத்தனை ஆக்கிரமிப்புக்கள். வெளவால்கள் வாழ்விடமாக மட்டுமே அது உள்ளது.ஆயிரம் வருடங்களுக்கு முன் தலை சிறந்த ராணியாய் திகழ்ந்தவருக்கு நாம் காட்டும் மரியாதை இதுவோ??அந்த கோவிலுக்கு தினம் சென்று அதை சுத்தம் செய்து ராமலிங்க சுவாமியை தரிசிக்க மனம் ஆர்வம் கொள்கிறது. தஞ்சாவூர் அல்லது கும்பகோணம் பகுதியில் வசிப்பின் நான் அதை செய்திருக்கலாம்.ஆயிரம் ஆண்டுகள்,ஒரு மகா ராணியையே விழுங்கிவிடும் பொது நாம் எம்மாத்திரம்?? காலம் மாறிக் கொண்டே தான் இருக்கிறது.இன்னும் நூறு வருடங்களில் நாம் வாழ்ந்த சுவடு கூட இங்கே மிஞ்சாது.இதை புரிந்து கொள்ளாமல் ஆட்டம் போடும் மனிதர்கள். இன்னும் ஆயிர வருடங்களுக்கு பிறகும் இவள் பேச படவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன். காலம் அனைத்தையும் சுருட்டி தன்னுள் அடக்கும் திறன் உடையதுதான்,ஆனால் நாம் வாழும் வாழ்க்கை உன்னதமாக இருந்தால் காலம் கடந்தும் நாம் வாழலாம்!
வாழ்க பஞ்சவன்மாதேவி! சோழம்! சோழம்! சோழம்!
பஞ்சவன்மாதேவிசுவரம் ,பட்டீஸ்வரம் |
மிஞ்சி உள்ள மதில் சுவர் |
மோசமான நிலைமையில் துவாரபாலகர் சிலை |
Comments
Post a Comment