Skip to main content

சத்ரியனாய் இருப்பதை விட சானக்யனாய் இருப்பதே மேல்

சத்ரியனாய் இருப்பதை விட சானக்யனாய் இருப்பதே மேல் ,என்று பலர் கூற கேட்டிருக்கிறோம். இதற்கு அர்த்தம் வீரத்தை காட்டிலும் விவேகமே மேல் என்பதாகும். இதற்கு உதரனமாய் திகழ்ந்த சாணக்யன் யார் என்று நம்முள் பல பேருக்கு தெரிந்திருக்காது.விஷ்ணு குப்தா என்றும் கௌடில்யா என்றும் அழைக்கப்பட்டு  பாடலிபுத்ர நகரத்தில் பிறந்தவர். அப்பொழுது மகத நாட்டை ஆண்ட தனாநந்தா என்ற ஒரு அரசன், கொடுங்கோள் ஆட்சி செய்து வந்தான்.  அந்த ஆட்சியில் சானக்(சாணக்யாவின் தந்தை ) என்ற அழைக்கப்பட்ட ஒரு அந்தணன் இந்த ஆட்சிக்கு எதிராக குறல் கொடுத்து வந்தார். பின் அவர் தனானந்தாவால் கொல்லப்பட்டார்.இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சாணக்யா தநானந்தாவை அரியணை விட்டு அகற்றுவதாகவும் அது வரை தன்  சிகையை முடிய மாட்டேன் என்றும் சபதம் செய்தார்.பின்பு டக்ஷில்லா பல்கலைக்கழகத்துக்குச் சென்று வேதங்களை கற்றறார். அரசியல் மற்றும்  பொருளியல் துறையில் மிகச் சிறந்து விளங்கினார்.சிறு வயதிலிருந்தே நல்ல கேள்வி ஞானம் உடையவர்.அங்கு படித்து முடித்த பிறகு அங்கேயே கற்பிக்க ஆரம்பித்தார்.ஆச்சார்யா என்று அனைவராலும் அழைக்கப் பட்டார்.பல ராஜாக்களும் ,யுவராஜர்களும் இவரிடம் கல்வி பயில ஆசை காட்டினார்கள்.அந்த காலத்தில் பாரதம் பல சிற்றரசர்களால் ஆட்சி செய்யப்பட்டது. பாரதத்தை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு உண்டு.மகத நாடு சொல்லிக்கொள்ளக்கூடிய அளவு பெரிய பரப்பளவு  கொண்டது. அப்பொழுது கிரேக் நாட்டை சார்ந்த அலெக்சாண்டர் இந்தியா நோக்கி படை எடுத்து வந்தார்.இந்தியாவை அந்நிய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவும்,ஒற்றுமையான பாரதத்தை உருவாக்கவும் ,தநானன்தவை பழிவாங்கவும் ஒரு சேர திட்டம் தீட்டினார்.பின்பு பல சிற்றரசர்களிடம் போய் பேசி ஒற்றுமை படைக்க எண்ணினார்.ஒரு வேலை ,சாணக்யா இல்லாவிட்டால் அலெக்சாண்டர் பல சாம்ராஜ்யங்களை முறியடித்து இருந்திருக்கலாம். பின்பு தனானந்தாவை அவர் சந்திரகுப்த மௌர்யா மூலமாக தோற்கடித்து மகத நாட்டு வரலாற்றை மாற்றி அமைத்தார். சாணக்யா ,சந்திரகுப்தாவுக்கு சிறு வயதிலிரிந்தே சிறிதளவு  விஷத்தை அவருக்கு அறியாமலேயே உணவில் கலந்து கொடுத்து வந்தார்.இதற்கு காரணம் உடலில் இதற்க்கு ஏற்ற எதிர்ப்பு சக்தி தோன்றும்.,பிற் காலத்தில் எதிரிகள் குடுக்கும் நஞ்சு அவரை ஏதும் செய்யக்கூடாது என்ற நோக்கத்தில் இதை செய்தார்.ஆனால் இதை அறியாத சந்திரகுப்தாவின் மனைவி இதை உட்கொள்ள நேர்ந்தது.அப்பொழுது அவள் வயிற்றில் இருந்த பிள்ளையை வெளியே எடுத்து வளர்த்தார்கள்.அந்த குழந்தைதான் பிந்துசரா,மாமன்னர் அசோகருடைய தந்தை. மகத அரசியலை பற்றி இவர் எழுதிய அர்த்தசாஸ்திரா மிகவும் பிரசதி பெற்ற ஒன்று. அரசியல் செய்ய வரும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.சாணக்ய நியதியின் படி ஒரு எதிரியை அழிக்க வேண்டும் எனில் அவனை வேரோடு அழிக்க வேண்டும்.ஒரு விஷயத்தை மிக நுணுக்கமாக யோசித்து திறன் பட செய்வதில் வல்லவர். இதை செயல் படுத்தியே அவர் பாரதத்தை வேற்று நாட்டு படையெடுப்பில் இருந்து காத்து,பாரதத்தின் ஒற்றுமைக்கு வித்திட்டார்.பின்பு மகத நாட்டில் நாலந்தா பல்கலைகழகத்தை நிறுவினார்.அந்த காலத்தில் மிக பெரிய பல்கலைகழகம் அது. உலக பிரசதி பெற்றது.ஒரு முறை சாணக்யாவை காண ஒரு வேற்று நாட்டு புலவர் வந்த பொழுது,தன்  வீட்டில் எறிந்த விளக்கை அவர் அணைத்து வேறு விளக்கு ஏற்றினார்.ஏன் என்று கேட்ட பொழுது அது அரசாங்கம் வாங்கி கொடுக்கும் எண்ணை ,அரசாங்க காரியத்துக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும்,தன் சொந்த காரியங்களுக்கு பயன்படுத்துவது தவறு என்றும் கூறினார். இந்த கால அரசியலை பார்த்த நமக்கு இது பெரும் வியப்பாக இருப்பது ஆச்சரியம் இல்லை . ஒரு எண்ணையை கூட தவறாக ப்ர்யோகிகாமல் இருந்த சாணக்யன் எங்கே ? ஏழைகளிடம் சூறையாடி ,தொட்ட அனைத்திலும் ஊழல் செய்து ,மனித அடையாளத்தையே சுத்தமாக தொலைத்து விட்ட நம் அரசியல்வாதிகள் எங்கே? ஒரு நல்ல ஆட்சி அமைய பல அரசர்களிடம் பொய்  சொன்னான் சானக்யான் .அது மக்கள் நலனுக்காக .ஆனால் இன்று பலரும் தர்மத்தையும்,நீதியையும் தொலைத்த சானக்யர்காலக இருக்கிறார்கள். நிகழ் காலத்தோடு போராடுபவன் சத்ரியன் ,எதிர்காலத்தை சரியாக கணக்குப்போட்டு வாழ்பவன் சாணக்யன்.இன்று பல பேர் சானக்யனாக வாழ்வதாக எண்ணி மனிதனாக கூட வாழமல் இருக்கிறார்கள். இந்திய தலைவர்களே,சானக்யனாக இருங்கள் ,அதற்கு முன்பு மனிதனாக இருங்கள்.

Comments

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

அத்தியாயம் 3

“ யார் நீ ?” கம்பீரமாக வந்தது கேள்வி . தோற்றத்துக்குரிய வீரமும் , தோரணையும் சற்று கூட பிசக வில்லை . அவள் நின்ற தோரணையே அவள் சாதாரண பெண் அல்ல என்பதைக் காட்டியது . சோழர்களைப் பற்றி ஆயிரம் தான் படித்திருந்தாலும் இவளை பார்த்த உடன் ‘ அப்பப்பா , பெண்களுக்கே இவ்வளவு வீரம் என்றால் இது உண்மையிலே புலி வம்சம் தான் ‘ என்ற எண்ணம் எனக்கு உதித்தது . மதிப்பு நிறைந்த விழிகளை அவள் கயல் விழிகளின் மேல் நாட்டியதும் , நினைவு தெளிந்தவன் போல் பேசத் துவங்கினேன் . “ என் பெயர் திவாகரவர்தன் . தங்களின் வீரத்தைக் கண்டு , உங்களை பாராட்டாமல் இருக்க இயலவில்லை . அதற்ககுள் இவர்கள் ...” “ வர்தனர் பரம்பரையோ ? வடக்கே உடுக்கும் உடுப்பு இதுவல்லவே . நீ பாரத தேசத்தவன் போல் இருக்கிறாய் . ஆனால் ஆங்கிலேயர் உடுப்பில் இருகிறாயே ?” “ நான் தமிழன்தான் . 1500 வருடம் காலப் பின் நோக்கில் வந்துள்ளேன் .” அவள் சிரித்துக் கொண்டே “ இளைஞரே , இதெல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள் . இது சோழ நாடு . போர் காலம் வேறு . பத்திராமாக ஊர் போ...

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு : மகாகவியின் உன்னதமான வரி இது. குரோதத்துக்கும் ரௌதிரதுக்கும் சிறிய வித்யாசம் மட்டுமே. அது எங்கு எப்பொழுது யார் மீது என்ற கேள்விகளைப் பொருத்தது.ரௌத்திரம் என்ற ஒன்றை பல இடங்களில் இந்த மனித சமூகம் மறந்து விடுகிறது. இதிகாசங்களில் தொடங்கி இன்று வரை மனிதன் ரௌத்திரம் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு நேர்ந்தால் அநீதி; பிறருக்கு நேர்ந்தால் விதி என்று என்னும் மனித குல மாணிக்கங்கள்  நாம். சமுகத்தில் நடக்கும் அநீதி கண்டு கோபம் கொள்வோர் எத்தனை பேர் ?நாடு என்ன நிலையில் இருந்தால் என்ன? யாரு எப்படி போன என்ன? எனக்குன்னு வர வரைக்கும் நான்  சும்மா தன இருப்பேன்.இப்படி பட்ட எண்ணம் தான் இன்று மேலோங்கி நிற்கிறது. இன்று மட்டும் அல்ல புண்ணிய காவியம் ஆனா மகாபாரதத்தில் தொடங்கி இன்று வரை இருக்கும் சாமானிய மக்கள் மன நிலை. அன்று அந்த துருபதன் மகளும்  ,வேள்வியில் உதித்தவளும் ஆனா திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதி கண்டு எழுந்தவர்கள் எத்தனை பேர்?   இதுவே. பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறுவது : "நெட்டை மரங்களென நின்று புலம்பினார்  பெட்டை புலம்பல் பிறர்க்குத் துணை...