Skip to main content

காவேரி மைந்தன் பொன்னியின் செல்வனுக்கு

பாரதம் கண்ட மிக உன்னதமான சக்ரவர்த்திகளில் ஒருவர்  ராஜ ராஜ சோழன். அருண் மொழி வர்மன் என்ற இயற்பெயர் மட்டும் இன்றி ராஜ ராஜ தேவர்,பெருவுடையார் , ராஜ கேசரி வர்மன் என்ற பல பெயர்களுக்குச் சொந்தக்காரர். பராந்தக சுந்தர சோழருக்கும் ,திருக்கோவிலூர் மலையமான் மகள்  வானவன்மாதேவிக்கும் மகனாக பிறந்தவர்.ஐப்பசி மாதம்,சதய நட்சத்ரத்தில் இவர் அவதரித்ததின் பொருட்டு ,சதய திருவிழா என்று மிக கோலாகலமாக சோழ தேசம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இவரது தமையன் ஆதித்த கரிகலானே பட்டத்து இளவரசன். இவரது தமக்கை குந்தவை நாச்சியார். தமக்கையின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் உடையவர். தமக்கையின் மீது உள்ள பாசத்தில் தன் மகளுக்கும் குந்தவை என்ற பெயர் இட்டார்.சோழ அரசியலில் குந்தவை பிராட்டியாருக்கும் ,அவளுடைய கணவனான வல்லத்து  அரசன் வந்தியாதேவருகும் ஒரு மிக பெரிய இடம் உண்டு. இதை நாம் தஞ்சை பெருவுடையார் கோவில் கல் வெட்டுகளில் காணலாம். பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் இருக்க அருண் மொழி அரியணை ஏறியது எப்படி என்று  நீங்கள் யோசிக்கலாம். அதற்கு நாம் சோழ தேச அரசியலில் கொஞ்சம் பின் நோக்கி செல்ல வேண்டி   உள்ளது .சோழ மன்னர் கண்டராதித்தனின் மகன் உத்தம சோழன் ஆவான். கண்டராதித்தன் இறந்த பொழுது உத்தம சோழன் சிறு பிள்ளை. ஆதலால்,கண்டராதித்தனின் தம்பியான அரிஞ்சய சோழன் ஆட்சிக்கு வந்தார்.அதற்கு பிறகு சுந்தர சோழர் ஆட்சியில் இருந்தார். அப்பொழுது ஏற்பட்டது  ஒரு ஆட்சி குழப்பம். அடுத்து ஆட்சி செய்ய வேண்டியது யார்? மதுராந்தக  தேவர் என்ற உத்தம சோழனா? அல்லது பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனா  என்று..?  அப்பொழுது ஆதித்த கரிகாலனை உத்தம சோழனின் ஆபத்துதவிகள் சிலர் கொன்றுவிட்ட காரணத்தினால் உத்தம சோழனே அடுத்த சக்ரவர்த்தி என்ற நிலை உருவாயிற்று. மக்கள் யாரும் அதை விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் அருண் மொழியே அரசாள வேண்டும் என்று விரும்பினார்கள்.இருப்பினும் அருண்மொழி ஆட்சியை அப்பொழுது ஏற்க மறுத்துவிட்டார். பின்பு உத்தம் சோழன் தன் ஆட்சியில் சேர தேசத்து அந்தணர்களுக்கு அதிக மதிப்பு கொடுத்து வந்தது மக்களுக்குப் பிடிக்கவில்லை. ஆடும் வரை ஆடட்டும் என்று அருண்மொழி உத்தமசொழனை விட்டுவிட்டார். அதற்கு பின்புதான் ராஜ ராஜ சோழனாக, அருண் மொழி வர்மன் ஆட்சி செய்யத் துவங்கி எல்லா திசைகளிலும் தமிழர்கள் பெருமையை  நிலை நாட்டினார். ஆட்சி செய்யத் துவங்கிய உடனேயே ,காந்தளூர் கடிகையை அடித்து சேரர்களை கட்டுக்குள் கொண்டுவந்தார்.அது மட்டும் இல்லாமல் நடு நாடு, தொண்டை நாடு,கொங்கு நாடு எல்லாம் சோழ தேசத்துக்கு உட்பட்டது. கீழை சாளுக்கிய இளவரசன் விமளாதிதனுக்கு ராஜ ராஜ சோழனுடைய மகள் குந்தவைக்கும் திருமணம் நிகழ்ந்தது. ஆகவே கீழைச் சாளுக்கியம் என்ற அந்த வேங்கியும் சோழ தேசத்தோடு உடன்பாடு கொண்டது. ராஜ ராஜ சோழன் ,சைவ சமயத்தின்  மீது மிகுந்த நாட்டம் கொண்டவர். சிவன் மேல் தீரா காதல் கொண்டவர்களால் மட்டுமே மிக பிரம்மாண்டமான ஒரு படைப்பை உருவாக்க இயலும். அந்த தஞ்சை பெருவடையார் கோவில் , பார்ப்பவர் அனைவரையும் வியப்புக்குள் ஆழ்த்திவிடும்.மாபெரும் இறை அன்பு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். ஆயிரம் ஆண்டுகளை கடந்து நிற்கிறது என்று எழிதில் கூறிவிட இயலாது. இந்த ஆயிரம் ஆண்டுகளில் எத்தனை புயல்கள் ,எத்தனை படையெடுப்புக்கள்,எத்தனை சாம்ராஜ்யங்கள் ,எத்தனை மன்னர்கள் ,அது மட்டும் இல்லாது ஆங்கிலேயர்  ஆட்சி என்று வரலாற்றை புரட்டி போட்ட பல சம்பவங்களையும் கடந்து தமிழர்களின் நாகரிக அடையாலமாக இது திகழ்கிறது. அந்த பிரமாண்டத்தை பார்க்கும் பொழுதுதான் ராஜ ராஜ சோழன் மாபெரும் சக்கரவர்த்தியாக திகழ்ந்தது மட்டும் இன்றி ,ஒரு பெரும் சிவ தொண்டராகவும் இருந்திருக்க வேண்டும். அந்த லிங்கத்தின் பிரம்மாண்டமும் ,விமானத்தின் பிரம்மாண்டமும் என்னை வியப்பில் ஆழ்த்தி கொண்டே இருக்கிறது.  ,ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எந்த தொழில்நுட்பமும் இல்லாமல் இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்தியது பெரிய விஷயம் அல்லவா??ராஜ ராஜர் மக்களுக்கு மிகவும் பிடித்தவர் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.அவருக்கு பிறகு இதே போல் கட்ட எண்ணிய ராஜேந்திர சோழன் ஜெயங்கொண்டபுரத்தில் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் ஆகட்டும்,இரண்டாம் ராஜ ராஜன் கட்டிய தாராசுரம் ஆகட்டும் முழுமை பெறாமால் போயிற்றே. தஞ்சை பெருவுடாயருக்கு இணையாக எந்த படைப்பும் படைக்க முடியவில்லையே..! அப்பொழுது அந்த சோழபுரி சக்ரவர்த்தி ராஜ ராஜ சோழன் எவ்வளவு இறை அருள் பெற்றிருக்க வேண்டும்?வரலாற்றில் இடம் பெறுவதற்காக மட்டும் சரித்திரம் படைத்த பல சக்ரவர்த்திகள் வாழ்ந்த தேசத்தில்,மக்களுக்காக வாழ்ந்த மாமன்னர் இவர்.  பல நாகரிங்கள் மாறி விட்ட போதிலும் ,பல வருடங்கள் ஓடி விட்ட பொழுதிலும் அவர் மீது தீரா காதல் கொண்ட என்னைப் போல் பல பேர் உள்ள வரையில் அவர் புகழும் அந்த பெருவுடையார் கோவிலும் வரலாற்றில் என்றும் நிலை பெற்று நிற்கும்.

                          வாழ்க ராஜ ராஜ சோழன்! 
                          சோழம்! சோழம் ! சோழம்! 


 பெருவுடையார் கோவில்,தஞ்சை




சோழ தேசத்துச் சக்ரவர்த்தி முதலாம் ராஜ ராஜன்

Comments

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

அத்தியாயம் 3

“ யார் நீ ?” கம்பீரமாக வந்தது கேள்வி . தோற்றத்துக்குரிய வீரமும் , தோரணையும் சற்று கூட பிசக வில்லை . அவள் நின்ற தோரணையே அவள் சாதாரண பெண் அல்ல என்பதைக் காட்டியது . சோழர்களைப் பற்றி ஆயிரம் தான் படித்திருந்தாலும் இவளை பார்த்த உடன் ‘ அப்பப்பா , பெண்களுக்கே இவ்வளவு வீரம் என்றால் இது உண்மையிலே புலி வம்சம் தான் ‘ என்ற எண்ணம் எனக்கு உதித்தது . மதிப்பு நிறைந்த விழிகளை அவள் கயல் விழிகளின் மேல் நாட்டியதும் , நினைவு தெளிந்தவன் போல் பேசத் துவங்கினேன் . “ என் பெயர் திவாகரவர்தன் . தங்களின் வீரத்தைக் கண்டு , உங்களை பாராட்டாமல் இருக்க இயலவில்லை . அதற்ககுள் இவர்கள் ...” “ வர்தனர் பரம்பரையோ ? வடக்கே உடுக்கும் உடுப்பு இதுவல்லவே . நீ பாரத தேசத்தவன் போல் இருக்கிறாய் . ஆனால் ஆங்கிலேயர் உடுப்பில் இருகிறாயே ?” “ நான் தமிழன்தான் . 1500 வருடம் காலப் பின் நோக்கில் வந்துள்ளேன் .” அவள் சிரித்துக் கொண்டே “ இளைஞரே , இதெல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள் . இது சோழ நாடு . போர் காலம் வேறு . பத்திராமாக ஊர் போ...

சந்தர்பங்களால் ஆனதே வாழ்கை !

' silence and smile are two powerful tools '  என்று ஒரு அழகான ஆங்கில பழமொழி உண்டு.  ஒரு மனிதனுக்கு சிரிப்பும் அமைதியும் மிக முக்கியம். அது  எப்படி,எப்பொழுது ,எங்கு வெளிப்படுகிறது என்பது ஒரு தனி நபரைப் பொருத்தே. சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிக்க மறந்தால் அது ராமாயணம்.   சிரிக்கக்கூடாத இடத்தில் மறந்து சிரித்தால் அது மகாபாரதம். மகாபாரதப் போருக்கே வித்தாக அமைந்தது அந்த தப்பான நேரத்திலும் இடத்திலும் ஏற்பட்ட சிரிப்புதான்.  பாஞ்சாலி  என்று அழைக்கப்பட்ட திரௌபதி சிரித்த அந்த சிரிப்பு தான் மகாபாரதத்தின் அடிப்படை. ராஜசூரியா யாகம் நடந்த அந்த நாளில்  கௌரவர்களில் ஒருவரான துரியோதனன்  கீழே விழுந்ததை பார்த்து திரௌபதி சிரித்தாள். ஏற்கனவே கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஒரு மனஸ்தாபம் இருந்தது.இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அது பெறுகியது. அது  மட்டும் அல்லாது,திரௌபதியின் சுயம்வரத்தன்று கர்ணனை இழிவுபடுத்தியது எவ்வளவு பிசகு என்று திரௌபதி முன்னாலே அறிந்து இருந்தால் அந்த தவறை செய்யாமல் இருந்திருப்பாள். இந்த  இரண்டு சிரிப்பும் இல்லாம...