சோழர்கள்...நம் தமிழக நாகரீகம் வளர வித்துக்களாய் இருந்தவர்கள்.சோழர்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது ராஜ ராஜ சோழன்.ராஜ ராஜ சோழன் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது தஞ்சை பெருவுடையார் கோவில்.ஆனால் எனக்கு வேறு ஒருவரும் நினைவில் வருகிறார்.பஞ்சவன் மாதேவி. அடிப்டையில் தேவரடியாளாக (நாட்டியப் பெண் ) இருந்தவர். ராஜ ராஜ சோழனை மணம் முடித்த பிறகு அரசியல் மற்றும் நிருவாகங்களில் பெறும் பங்கு வகித்தவர். பல போர்களை கண்டவர்.ஒரு அரசரின் மனைவியாக மற்றும் இன்றி சோழ தேசத்தின் மேன்மைக்காக உழைத்தவர். அவள் ராணியாக இருந்து ,சுகபோகங்களை அனுபவித்து மட்டும் போய் இருக்கலாம்.ஆனால் அவள் அப்படி செய்யவில்லை.தனக்கு பிறக்கக் கூடிய குழந்தையால் ராஜேந்திர சோழனுக்கு இளவரசர் பட்டம் கட்ட முடியாமல் போய் விடுமோ என்று பயந்து தன்னை மலடாகிக்கொண்டவள் . ராஜேந்திர சோழர் இவளுக்காக கட்டிய பள்ளிப்படை கோவில் இன்றளவும் பட்டீஸ்வரத்தில் இருப்பதை நாம் காண முடியும்.தன் சொந்தத் தாய் அல்லாவிட்டாலும் ,ராஜேந்திர சோழர் எழுப்பி உள்ள இந்த கோவிலை பார்க்கும் பொழுது அவள் எவ்வளவு உன்னதமான ராணியாக இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறத...
சப்தங்கள் தொலைத்த இரவில் தமிழை நோக்கி ஒரு தவம்.