மதம் என்பது ஒரு மனிதனை கட்டுக்கோப்பாக வைக்க மட்டும் இன்றி அவன் வாழ்வை செம்மை படுத்தும் நெறிகளைகயும் கொடுக்க வல்லது. உலகில் உள்ள எல்லா மதங்களும் சொல்லும் விஷயம் ஏரத் தாள ஒன்றே. அதில் பல நூற்றாண்டுக்கு முன்பு தோன்றிய இந்து மதம் ,ஒரு நாகரீக மாற்றத்தை மட்டுமின்றி ஒரு அற்புதமான கலாசாரத்தையும் தந்தது. சைவம்,வைணவம், ஷக்தி வழிபாட்டு என்று பல உட்பிரிவுகளைக் கொண்டது. இந்து மதத்தை ஒரு அறிவியல் சார்ந்த விஷயமாக பார்ப்பதே உவப்பு. இந்து மதம் கொடுத்த யோகிகளும் ஞாநிகளும் ஏராளம். இந்து கோயில்களை எடுத்துக்கொள்வோம், கருவறை அமைந்த மூலஸ்தானத்தில்தான் காந்த அலைகளின் தாக்கம் அதிகம். கருவரையில், வைக்கப்படும் செப்பு தகடுகள் இந்த காந்த அலைகளை அதிகப்படுத்தும்.இந்த காரணம் கருதிதான் நாம் கோயிலுக்குச் செல்லும் போது கோயிலை சுற்றி வருகிறோம்.இதே போல மூட நம்பிக்கை என்று இந்த கால மனிதர்கள் கூறும் பல விஷயங்களுக்குப் பின்னால் அறிவியல் சார்ந்த பல விளக்கங்கள் கொடுக்கலாம்.நம் முன்னோர்கள் கணித்து வைத்த பஞ்சாங்கம் ,ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு அப்பால் வர இருக்கும் பௌர்ணமி, அம்மாவசை ஆகியவற்றை சரியாக சொல்கிறதே?எப்படி ?...
சப்தங்கள் தொலைத்த இரவில் தமிழை நோக்கி ஒரு தவம்.