கும்பகோணம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது டிகிரி காப்பி! தஞ்சாவூர் அருகே, காவிரிக் கரையோரம் அமைந்துள்ள கும்பகோணம், ஒரு காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் முக்கியப் புள்ளி! குடந்தை என்று அழைக்கப்பட்டு வந்த நகரம். தடுக்கி விழுந்தால் கோயில்கள்,காவிரியால் செழித்த வயல் வெளிகள் என்று விளங்கும் நகரம்! மகாமகத்திற்கும், ஜோதிடத்திற்கும் பெயர் போன நகரம்! இன்று கும்பகோணத்தில் உள்ள பட்டீஸ்வரம் தான், ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகராக இருந்த பழையாறை.விஜையால சோழனுக்கு பின்பு தான் தஞ்சை பிரசித்தி பெற துவங்கியது.அது வரை பழையாறை நகரே சோழ சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரமாகத் திகழ்ந்தது! அக்காலத்தில் கோயில்கள் ஆன்மீக சமந்தப்பட்ட விஷயமாக மட்டும் இல்லாமல், அந்த ஆட்சியின் ஒரு இயந்திரமாக இருந்திருக்கிறது! காவிரி ஆற்றங்கரையில் உள்ள கோயில்கள் சில, காசிக்கு இணையானவை என்று கூறப்படுகிறது! அவற்றுல் ஒன்று, திருவிடைமருதூர் (திருஇடைமருதூர்) மகாலிங்கேஸ்வரர் கோவில்! இந்த கோவில் வரலாறு சற்று என்னை வியக்க வைத்தது! வரகுண பாண்டியன் என்ற அரசன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான்! ...
சப்தங்கள் தொலைத்த இரவில் தமிழை நோக்கி ஒரு தவம்.