ஹோய்ஸாளர்களின் சின்னம் பேலூர், ஹளேபீடு~சிற்ப கலையில் ஒர் சொர்கம். தக்ஷிணபாதத்தின் பனாரஸ் என்று கூறப்படும் பேலூர்,கர்நாடக மாநில தலைநகரமான பெங்களூரிலிருந்து 222 கி.மீ உம்,மாவட்ட தலைநகரான ஹாஸன் என்ற ஊரில் இருந்து 38 கி.மீ தூரத்தில் உள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டு இறுதியில் சாளுக்கியர்கள் வீழத் துவங்கி இருந்தார்கள். அதன் பிறகு நான்கு முக்கிய சாம்ராஜ்யங்கள் தெற்கே இருந்தன. அவற்றில் ஒன்று ஹோய்ஸாளர்கள். 13ஆம் நூற்றாண்டில் கர்நாடகவிலுள்ள முக்கிய பகுதிகள், தமிழ் நாடு மற்றும் கேரளா வில் சில பகுதிகளும், ஆந்திரா மற்றும் டெக்கான் பகுதிகளும் ஹோய்ஸாளர்களின் கீழ் இருந்தது. அவர்களில் முக்கிய அரசர்கள் விஷ்ணுவர்தனன், இரண்டாம் மற்றும் மூன்றாம் வீரபல்லாள ஆவர். விஷ்ணுவர்தன் காலத்தில் பேலூர் ஹோய்ஸாளர்களின் தலைநகராக இருந்தது. பேலூர் சென்னகேசவ ஆலயம் 1117ஆம் ஆண்டு விஷ்ணுவர்தனால் கட்டத் தொடங்கப்பட்டது. ஹோய்ஸாளர்களின் கலை நுட்பம் மிக நுண்ணிய வேலைப் பாடுகளைக் கொண்டது. பேலூர்க்குப் பிறகு ஹளேபீடுவை தலைநகராகக் கொண்டு இயங்கத் தொடங்கியது. ஹோய்ஸாளர்களின் கோவில்கள் அலங்காரச் சிற்பகலையோடு கூடிய ஜன்ன...
சப்தங்கள் தொலைத்த இரவில் தமிழை நோக்கி ஒரு தவம்.