இந்து மதத்தில் உள்ள நடைமுறைகளை மூட நம்பிக்கையாக பார்க்கும் இந்துக்களுக்கு மட்டுமே இப்பதிவு.ஒரு இந்து என்ற முறையில் நான் இந்தப் பதிவை மேற்கொள்ள நேர்கிறேன். வலைதளங்களில் இந்துக்களின் பல பழக்கவழக்கங்களை கேலி செய்யும் பதிவுகளை இந்துக்களே வெளியுடும்போது உள்ளெழுந்த சினத்தின் வெளிப்பாடு இப்பதிவு. எந்த ஒரு மதத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்களுக்கு என்று சில வழிபாடு முறைகள் உண்டு. அதற்கு காரண காரியங்களும் உண்டு. நம் மதத்திலும் அதே போலத்தான். ஒரு முஸ்லிமோ அல்லது கிறிஸ்துவோ தனது மதத்து அவதூர் செய்யும் எந்த படைப்புகளையும் ஏற்பதில்லை . ஆனால் நாம்?இந்த தலைமுறையினர் குறிப்பாக எதையும் புரிந்து கொள்ள முன்வருவதும் இல்லை. உங்கள் மதம் ஏதற்காக இதை சொல்கிறது என்று நீங்களும் கேட்பதில்லை ; பெற்றோர்களும் சொல்வதில்லை. சில நேரங்களில் அவர்களுக்கும் தெரிவதில்லை. மூட நம்பிக்கைகலாக்கப்பட்ட இந்து கலாச்சாரங்கள் பல. நம் பண்டிகைகளுக்குக் கூட விடுப்பெடுக்க வழி இல்லாமல் கோர்போர்டே அடிமைகளாய் இன்னும் எவ்வளவு காலம்? தனியார் மட்டும் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்பவர்களில் எத்தனை பேர் க...
சப்தங்கள் தொலைத்த இரவில் தமிழை நோக்கி ஒரு தவம்.