இந்து மதத்தில் உள்ள நடைமுறைகளை மூட நம்பிக்கையாக பார்க்கும் இந்துக்களுக்கு மட்டுமே இப்பதிவு.ஒரு இந்து என்ற முறையில் நான் இந்தப் பதிவை மேற்கொள்ள
நேர்கிறேன்.
வலைதளங்களில் இந்துக்களின் பல பழக்கவழக்கங்களை கேலி செய்யும் பதிவுகளை
இந்துக்களே வெளியுடும்போது உள்ளெழுந்த சினத்தின் வெளிப்பாடு இப்பதிவு. எந்த
ஒரு மதத்தை எடுத்துக் கொண்டாலும் அவர்களுக்கு என்று சில வழிபாடு முறைகள் உண்டு.
அதற்கு காரண காரியங்களும் உண்டு. நம் மதத்திலும் அதே போலத்தான். ஒரு முஸ்லிமோ
அல்லது கிறிஸ்துவோ தனது மதத்து அவதூர் செய்யும் எந்த படைப்புகளையும் ஏற்பதில்லை .
ஆனால் நாம்?இந்த தலைமுறையினர் குறிப்பாக
எதையும் புரிந்து கொள்ள முன்வருவதும் இல்லை. உங்கள் மதம் ஏதற்காக இதை சொல்கிறது என்று நீங்களும் கேட்பதில்லை ;
பெற்றோர்களும் சொல்வதில்லை. சில நேரங்களில் அவர்களுக்கும் தெரிவதில்லை. மூட
நம்பிக்கைகலாக்கப்பட்ட இந்து கலாச்சாரங்கள் பல.
நம் பண்டிகைகளுக்குக் கூட விடுப்பெடுக்க வழி இல்லாமல் கோர்போர்டே அடிமைகளாய்
இன்னும் எவ்வளவு காலம்? தனியார் மட்டும் தொழில்நுட்பத் துறையில் வேலை
செய்பவர்களில் எத்தனை பேர் கடைசியாக வீட்டில் உள்ளோருடன் இணைந்து புதுத் துணி
உடுத்தி தீபாவளி கொண்டாடியது? பொங்கலா? அமெரிக்க கம்பனிகளுக்கு ஏது பொங்கல் ?
கார்த்திகை நோன்பு,திருவாதிரை, கோகுலாஷ்டமி, ராம நவமி, அனுமன் ஜெயந்தியை விடுப்பு நாட்களாக மட்டும் பார்க்கும் நாம் அது
என்ன எதற்கு என்று கூட ஆராயும் நிலையில் இல்லை. நம் மகாபாரதத்தை கூட விஜய் டிவி
சீரியல் ஆக்கும் வரை பொருத்து இருந்துதான் அறிந்து கொள்வோம். நம்
பாரம்பரியங்களுக்கும் முற்றுபுள்ளி இந்த ஜல்லிக்கட்டோடு. இப்படியே போனால் நாலு
தலைமுறை தாண்டும்போது இந்து மதம் பண்டிகைகள் ஏதும் மிஞ்சாது. ஹாலோவீனும் தேங்க்ஸ்
கிவிங்கும் மட்டும்தான். மகாபாரதம் நடந்ததர்க்கு அத்தாட்சியான் ஆய்வுகள் பல
மேற்கொள்ளப் படமாலே உள்ளன. dwaraka வில் கிருஷ்ணாவின் சாம்ராஜ்யம் கடலுக்கு
அடியில் படுத்து கிடக்கிறது. அதை பற்றி நமக்கு என்ன? இதே முஸ்லிம் கடவுளான ப்ரோபட்
பற்றி ஆய்வு துவங்காமல் இருக்கட்டும்? அங்கு நடப்பதே வேறு. நாம் தான் எதையும்
சகித்துக் கொள்பவர்கலாயிற்றே.
இந்த தலைமுறையினர் ஆயினும் முஸ்லிம்கள் தங்கள் மதத்தின் மீது கொண்டுள்ள
நம்பிக்கை நமக்கு ஏன் இல்லை? ஆயிரம் தான் விஞ்ஞானம் வளர்ந்து விட்டாலும் ,
விஞ்ஞானம் பதில் சொல்ல இயலா கேள்விகளுக்கு இந்து மதத்தில் விடை உண்டு. ஸ்ரீமத்
பாகவதத்தில் இல்லாத விஞ்ஞானம் இல்லை.
குழந்தை கருவில் எப்படி இருக்கிறது என்று மட்டும் தான் விஞ்ஞானம் சொல்லும். அது
என்ன நினைக்கிறது என்று கூட பாகவதம் சொல்லும்.உங்கள் சயின்ஸ் மூளைக்கே எட்டா
தொலைவு அது. வாழ்கையில் நம்மையும் மீறி
நடக்கும் எந்த விஷயத்திற்கும் சயின்ஸ் விடை அளிக்காது. ஆனால் நமது கீதை
அளிக்கும். வாழ்கையில் அடிபட்டு தெரபிஸ்ட் இடம் செய்யும் செலவை கீதையில்
செய்யுங்கள். மதத்தை தாண்டிய புத்தகம் அது. ஸ்ட்ரெஸ் மட்டுமே வாழ்க்கயாய் விட்ட
இந்த காலத்தில் வாழ்கையை மேம்படுத்த மதம் கண்டிப்பாகக் கை கொடுக்கும்.
இந்து வெறியர்கள் என்று ஒரு கூட்டம். அதில் ஒருவர் கூட கீதையை கண்ணில் கூட
பார்த்திர வாய்ப்பில்லை. தங்கள் மதத்தை புரிந்து கொண்ட எவரும் மதக் கலவரங்களில்
ஈடுபடமாட்டார்கள். போலிச் சாமியார்கள் ஒரு கூட்டம் வேறு போதாகுறைக்கு. முஸ்லிம் படையெடுப்புகள் ,மிஸ்ஸனரி மாற்றங்களை தாண்டிய
மதம். நம் கவனக் குறைவால் கண் முன் கீழே போய்க் கொண்டிருக்கிறது.
ஒரு கருத்தை விமர்சிக்கும் முன் அதை பற்றி அறியாமல் விமர்சிக்கும் பழக்கத்தை
விடுப்போம். தொன்மையான வேர்களை இணையத்தினால் நாலே தலைமுறைகளில் வெட்டி வீழ்த்தாமல்
இருக்க நம்மால் இயன்றதைச் செய்வோம். ஆன்மீகத்தை வழுவுவதால் உங்கள் நவ நாகரீகம்
எதுவும் மலை ஏரிவிடாது.
Comments
Post a Comment