இடம்: திருவிசலூர் திருவியலூர், திருவிசநல்லூர் என்றும் வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் வேப்பத்தூர் வழியில் அமைந்துள்ளது. வியலூர் என்ற பெயரில் தஞ்சையில் மேலும் இரண்டு ஊர்கள் உள்ளன. இங்கு உள்ள கோவிலில் சுவாமியின் பெயர் யோகனந்தீஸ்வரர்,அம்மை சாந்த நாயகி. வில்வாராண்யேஸ்வரர் ,புராதனேஸ்வரர் என்றும் அழைக்கப் பெறுவார். இராமாயணத்தில் வரும் ஜடாயு வழிபட்டுப் பேரின்பம் எய்திய ஊர். ரிஷப ராசிக்குரிய தோஷ நிவர்த்தித் தலமாக இது பார்க்கப்படுகிறது. இக்கோவிலின் கல்வெட்டுகள் படி இக்கோவில் 985-1013 ல் அரசாண்ட சோழ தேசத்து மாபெரும் சக்ரவர்த்தி ராஜ ராஜ சோழன் காலத்து அவனிநாராயண சதுர்வேதிமங்கலத்தைச் சார்ந்தது.பின் 1011-1043 வரை ஆட்சி செய்த தட்சினபாத வேங்கை ராஜேந்திர சோழன் காலத்தில் வடகரை ராஜேந்திர சிம்மவளநாட்டு மண்ணி நாட்டு பிரம்மதேயமான் வேப்பத்தூர் சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்தது தெரிகிறது. சோழ நாட்டை வளநாடாக பிரித்து இருந்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் நிலவிய சபயைபோல் ஒவ்வொரு வள நாட்டிற்கும் ஒவ்வொரு தனிச்சபை. அந்நாட்டின் பொது காரியங்கள...
சப்தங்கள் தொலைத்த இரவில் தமிழை நோக்கி ஒரு தவம்.