Skip to main content

கொஞ்சம் பயணம் நிறைய வரலாறு: கல்வெட்டுகளைத் தேடி



இடம்: திருவிசலூர்
திருவியலூர், திருவிசநல்லூர் என்றும் வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் வேப்பத்தூர் வழியில் அமைந்துள்ளது. வியலூர் என்ற பெயரில் தஞ்சையில் மேலும் இரண்டு ஊர்கள் உள்ளன. இங்கு உள்ள கோவிலில் சுவாமியின் பெயர் யோகனந்தீஸ்வரர்,அம்மை சாந்த நாயகி. வில்வாராண்யேஸ்வரர் ,புராதனேஸ்வரர் என்றும் அழைக்கப் பெறுவார். இராமாயணத்தில் வரும் ஜடாயு வழிபட்டுப் பேரின்பம் எய்திய ஊர். ரிஷப ராசிக்குரிய தோஷ நிவர்த்தித் தலமாக இது பார்க்கப்படுகிறது.

இக்கோவிலின் கல்வெட்டுகள் படி இக்கோவில் 985-1013ல் அரசாண்ட சோழ தேசத்து மாபெரும் சக்ரவர்த்தி ராஜ ராஜ சோழன் காலத்து அவனிநாராயண சதுர்வேதிமங்கலத்தைச் சார்ந்தது.பின் 1011-1043 வரை ஆட்சி செய்த தட்சினபாத வேங்கை ராஜேந்திர சோழன் காலத்தில் வடகரை  ராஜேந்திர சிம்மவளநாட்டு மண்ணி நாட்டு பிரம்மதேயமான்  வேப்பத்தூர் சோழ மார்த்தாண்ட சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்தது தெரிகிறது.
சோழ நாட்டை வளநாடாக பிரித்து இருந்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் நிலவிய சபயைபோல் ஒவ்வொரு வள நாட்டிற்கும் ஒவ்வொரு தனிச்சபை. அந்நாட்டின் பொது காரியங்களை நிறைவேற்றும் பொருட்டு அமைக்கப்பட்டது.
ஊர்,கிராமம்,நகரம்,நாடு,மண்டலம் என்ற வரிசயில் சோழ தேசம் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. பிரம்மதேயம் என்பது பிராமனர்களுக்கு அழிக்கப்பட்ட ஊர்.

இத்தல கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும்
சோழ மன்னர்கள் – பன்னிருவர்
பாண்டியர் -  வரகுணபாண்டியன்
விஜயநகர் பேரரசர் – கிருஷ்னதேவராயர்
முதல் மற்றும் இரண்டாம் பராந்தகன் காலத்தில் விளக்குக்காகப் பொன்னும் ஆடுகளும் , அபிஷேகப் பொருட்களுக்காக நிலமும் வழங்கப்பட்டுளது. பராந்தக பல்லவராயன் காலத்திலும் இவை செய்யப்பட்டுள்ளன.
அரசர் ராஜ ராஜ சோழன்  இக்கொவிளுக்குத் துலாபாரம் புக்குதானம் செய்ததாகவும் கல்வெட்டு கூறுகிறது. இவருடைய தமக்கையும் வல்லவரயார் வந்தியத்தேவரின் மனைவியும் ஆனா குந்தவை நாச்சியார் பழையாறையில் இருக்கும்பொழுது நிலம் அளித்தார் என்ற கல்வெட்டும், ராஜேந்திர சோழனும் அவன் மனைவியரும் இக்கோவிலுக்கு அளித்த நன்கொடைகள் பற்றிய விவரங்களும் உண்டு. தென்புற பிரகாரத்தில் இக்கோவிலை கட்டியவநான ஆனந்த சிவன் என்பவனுடைய உருவம் இருக்கிறது. அதில் ஒரு பகுதி சுவர் மறைந்து விட்டது.

அந்தக் காலத்தில் கல்வெட்டுகள் என்பது அரசாங்க இயந்திரத்தின் ஆவணங்களாக இருந்துள்ளன. நம் முன்னோர்களின் வாழ்வியல் குறிப்புக்கள் அவை. கோவில் புதுப்பிக்கும் பணி என்ற பேரிலும், கோவிலை பராமரிப்பே இல்லாமல் விட்டுவிடுவதும் என்று நமது அலட்சியங்களால் அழியும் கல்வெட்டுக்கள் ஏராளம். 

Comments

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

அத்தியாயம் 3

“ யார் நீ ?” கம்பீரமாக வந்தது கேள்வி . தோற்றத்துக்குரிய வீரமும் , தோரணையும் சற்று கூட பிசக வில்லை . அவள் நின்ற தோரணையே அவள் சாதாரண பெண் அல்ல என்பதைக் காட்டியது . சோழர்களைப் பற்றி ஆயிரம் தான் படித்திருந்தாலும் இவளை பார்த்த உடன் ‘ அப்பப்பா , பெண்களுக்கே இவ்வளவு வீரம் என்றால் இது உண்மையிலே புலி வம்சம் தான் ‘ என்ற எண்ணம் எனக்கு உதித்தது . மதிப்பு நிறைந்த விழிகளை அவள் கயல் விழிகளின் மேல் நாட்டியதும் , நினைவு தெளிந்தவன் போல் பேசத் துவங்கினேன் . “ என் பெயர் திவாகரவர்தன் . தங்களின் வீரத்தைக் கண்டு , உங்களை பாராட்டாமல் இருக்க இயலவில்லை . அதற்ககுள் இவர்கள் ...” “ வர்தனர் பரம்பரையோ ? வடக்கே உடுக்கும் உடுப்பு இதுவல்லவே . நீ பாரத தேசத்தவன் போல் இருக்கிறாய் . ஆனால் ஆங்கிலேயர் உடுப்பில் இருகிறாயே ?” “ நான் தமிழன்தான் . 1500 வருடம் காலப் பின் நோக்கில் வந்துள்ளேன் .” அவள் சிரித்துக் கொண்டே “ இளைஞரே , இதெல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள் . இது சோழ நாடு . போர் காலம் வேறு . பத்திராமாக ஊர் போ...

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு : மகாகவியின் உன்னதமான வரி இது. குரோதத்துக்கும் ரௌதிரதுக்கும் சிறிய வித்யாசம் மட்டுமே. அது எங்கு எப்பொழுது யார் மீது என்ற கேள்விகளைப் பொருத்தது.ரௌத்திரம் என்ற ஒன்றை பல இடங்களில் இந்த மனித சமூகம் மறந்து விடுகிறது. இதிகாசங்களில் தொடங்கி இன்று வரை மனிதன் ரௌத்திரம் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு நேர்ந்தால் அநீதி; பிறருக்கு நேர்ந்தால் விதி என்று என்னும் மனித குல மாணிக்கங்கள்  நாம். சமுகத்தில் நடக்கும் அநீதி கண்டு கோபம் கொள்வோர் எத்தனை பேர் ?நாடு என்ன நிலையில் இருந்தால் என்ன? யாரு எப்படி போன என்ன? எனக்குன்னு வர வரைக்கும் நான்  சும்மா தன இருப்பேன்.இப்படி பட்ட எண்ணம் தான் இன்று மேலோங்கி நிற்கிறது. இன்று மட்டும் அல்ல புண்ணிய காவியம் ஆனா மகாபாரதத்தில் தொடங்கி இன்று வரை இருக்கும் சாமானிய மக்கள் மன நிலை. அன்று அந்த துருபதன் மகளும்  ,வேள்வியில் உதித்தவளும் ஆனா திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதி கண்டு எழுந்தவர்கள் எத்தனை பேர்?   இதுவே. பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறுவது : "நெட்டை மரங்களென நின்று புலம்பினார்  பெட்டை புலம்பல் பிறர்க்குத் துணை...