கி.பி.2050; இந்தியா “காலம் பொன் போன்றது “,“காலத்தை இழந்தால் திரும்பிப் பெற இயலாது”, “கடந்த காலத்தை எண்ணி எந்தப் பயனும் இல்லை,எதையும் மாற்ற இயலாது” இதெல்லாம் நாம் வளரும் போது நமக்குச் சொல்லப்பட்டவை. எட்டா தொலைவில் உள்ள கிரகங்களுக்குச் சுற்றுலா செல்ல வழி வகுத்து விட்ட விஞ்ஞானம் இந்த பழ மொழிகளையா மாற்றாது? ஆம். காலப் பெருவெளியில் பயணிக்கும் எந்திரத்தை இந்திய விஞ்ஞானிகள் வடிவைமைத்து உள்ளார்கள். இது மிகவும் ரகசியமான பணி. 5 விஞ்ஞானிகள் மற்றும் என்னைப் போல 2 ஐ.ஏ.ஸ் அதிகாரிகளும் இக்குழுவில் உள்ளோம். இது சாமநியார்களின் பயன்பாட்டுக்கு வந்தால் நிகழக் கூடிய விபரிதங்கள் ஏராளம். அரசாங்கத்துக்கே தெரியாமல் நடக்கும் பணி ஆதலால், மிகவும் நம்பிக்கைக் குறியவர்களை மட்டும் உள்ளடக்கியுள்ளோம் . இக்கருவியின் மூலம் கடந்த காலத்துக்கோ,எதிர் காலத்துக்கோ செல்லலாம். ஆனால் எந்த ஒரு நிகழ்வையும் மாற்ற இயலாது. அதாவது,எதிர் காலத்தில் சென்று என்ன நடக்கும் என்று காணலாம். ஆனால் நமக்கு சாதகமாக நிகழ்வுகளை மாற்ற இயலாது. அதையும் மாற்றவே எங்கள் உழைப்பு தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இது மிகவும் ரகசியமான த...
சப்தங்கள் தொலைத்த இரவில் தமிழை நோக்கி ஒரு தவம்.