காலச் சக்ரத்தின் சுழற்சியில் நாம் அனைவரும் மிகச் சிறிய அங்கங்கள். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில் பூமி இன்றில்லை. இன்று போல பல கண்டங்களோ ,நாடுகளோ அன்று இல்லை. ஹோமொசபியன்ஸ் என்று அழைக்கப்படும் மனித இனம் உருவாகவே பல்லாயிரம் ஆண்டுகள் ஆயிற்று. அதற்குப் பிறகு மொழி ,நாகரீகம் என்று படிப்படியாக வளரத் தொடங்கியது. பின்பு மனிதன் சமூகமாக வாழ கற்றுக் கொண்டான்.பின்பு மற்ற சமூகத்தார் நிலத்தை ஆக்ரமிக்க தொடங்கினான். தங்களை தற்காத்துக் கொள்ளவும் ,தங்களை விட வலு இல்லாத சமூகத்தை அடிமை படுத்தவும் எண்ணினார்கள். நாகரீக குழுமங்களாக இருந்த மக்கள் சாம்ராஜ்ய வட்டங்களுக்கு மாறினார்கள்.தங்களை காக்க ஒரு தலைமை இருந்ததால் மக்கள் சுக வாழ்வுக்கு பழக்கப்பட்டார்கள்.அனால் இந்த கால கட்டத்திலும் போர் என்பது இருந்தது.தற்காப்புக்கு போர் என்ற நிலமை மாறி,தங்கள் வலுவை அனைவருக்கும் காட்ட வேண்டும் என்ற எண்ணமும், பொருட்கள் பல வற்றை கொல்லை அடிக்கும் ஆவலோடுமே போர் நடந்தது.சர்வாதிகாரம் முடிந்த பிறகு சுதந்திர தேசங்கள் தோன்ற தொடங்கின.நாகரீகம் ,நவநாகரீகமாக மாறிற்று. ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதே மண்ணில் தம...
சப்தங்கள் தொலைத்த இரவில் தமிழை நோக்கி ஒரு தவம்.