Skip to main content

வரலாற்றுப் புத்தகத்துக்குள்

வரலாறா?!? அதை பத்தாம் வகுப்பு புத்தகத்தோட மூட்டை கட்டிட்டோமே! இந்த தலைமுறையினர் பதில். அசோகர் மரம் நட்டதும்,காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது மட்டும் தான் நமக்கு நெனவு இருக்கு.விஞ்ஞானம் எவ்வளவு முக்கியமோ,வரலாறும் அவ்வளவு முக்கியமே.இந்த காலகட்டத்தில், வரலாற்றை வருடங்கள் கொண்ட பெட்டகமாகவே பார்க்கிறோம். ஆனால் வரலாறு என்பது ஓர் உணர்வு. நாம் வாழும் இந்த மண்ணில் ஆயிரக்கணக்கான சாம்ராஜ்யங்களும், லட்சக்கணக்கான மன்னரகளும்,பல கலாச்சாரங்களும், நாகரீகங்களும் தோன்றி மறைந்திருக்கிறன. இப்பொழுது இந்தியா வல்லரசு நாடுகளில் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம், விஞ்ஞானத்தில் ஜப்பானுக்கு நிகரில்லாமலிருக்கலாம். ஆனால் அன்றோ, உலகத்தில் இருந்த அத்தனை அரசர்களுக்கும் இந்தியாவை ஆட்சி செய்வதே கனவாக இருந்தது. எங்கும் இல்லா செழிப்பு,வணிகம், மக்கள், கலை.இவைதான் இந்தியா மீது படையெடுக்க முக்கிய காரணங்களாக இருந்தன.தொழில்நுட்பங்களிலும் முதன்மையானவர்களாகவே இருந்து இருக்கிரோம்.தொழில்நுட்பம் இன்றியா ராஜேந்திர சோழர் கடாரம் வரை படை எடுத்தார்?! விஞ்ஞானம் இல்லாமலா தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அதே கம்பீரத்தோடு நிற்கிறது?  இன்றைய கட்டிடங்களுக்கு டெல்லி மெட்ரோ கட்டும்போது நடந்த நிலைமைதான். Astrology, astrophysics படித்தா நமது பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது?! எந்த civil engineer வைத்து திருமலை நாயக்கர், மதுரையில் அவ்வளவு அழகு வாய்ந்த மண்டபத்தை அமைத்தார். மாமல்லபுரம், வெறும் பாறைகள்  கொண்டு உருவாக்கப்பட்ட அழகியல் நகரம்.எந்த architect வைத்து விஜயநகரம் உருவானது?! அவ்வளவு கட்டமைப்பு வாய்ந்த நகரம். அனைத்தும் சுல்தான்களால் அழிக்கப்பட்டு இன்று நிர்மூலமாய் நிற்கும் கோவில்கள். சுல்தான்கள்,முகலாயர்கள், ஐரோப்பியர்கள் என்று பலருக்கு அடிமைப் பட்டும் குன்றா வளத்துடன் இருக்கும் தேசம்.நல்ல தலைவர்களை இழந்ததால் வல்லரசாக தேதி குறிக்கும் தேசம். இன்று நாம் நாகரீகம் என்ற பெயரில் மேலைநாட்டுக் கலாச்சாரங்களை உயர்வாக எண்ணலாம். ஆனால் நமது நாகரீக வேர்கள் மிக ஆழமானவை. இந்திய நாகரீகம் உணர்ந்து வெளி நாட்டவர்கள் யோகா, தியானம் என்ற மாறி வருகிறார்கள். William dalrymple என்ற ஆங்கில எழுத்தாளர் நமது வரலாற்றை அவ்வளவு அழகாக எழுதி உள்ளார். நம் வரலாற்றை அழகாக வர்ணிக்கும் எழுத்தாளர்கள் பலர் தோன்றிவிட்டார்கள். அவைகளை படியுங்கள்.
இன்று நாம் வாழும் இந்தச் சூழ்நிலைக்கு, நமக்காக அன்று வாழ்ந்தவர்கள் பலர்.வரலாறு அறிவதே அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை.
எதிர்காலம் நோக்கி, நிகழ்காலம் மறந்து ஒடும் மக்களே,இறந்த காலத்தையும் சற்று கவனியுங்கள்.

     நாம் விருட்சங்கள்; விதைத்தவர்களை                 வரலாறு அறியும். 

Comments

  1. மன்னனுக்காக மக்களா ? மக்களுக்காக மன்னனா ?
    வரலாறு என்ன சொல்கிறது ?
    ஆட்சிக்காக மக்களா ? மக்களுக்காக ஆட்சியா ?
    எனக்கு உயிர் கொடுத்த என் தமிழ் சமூகம் – எனக்கு என்ன வரலாற்றை
    தந்திருக்கிறது ?
    என்னை ஆண்ட அரசன் – அவனின் குடும்பம் – அவன் வென்ற வீரம் –
    அவன் ஆண்ட நாடு – அவன் கட்டிய கட்டிடங்கள் – செதுக்கிய பாறைகள் – நெய்த கொடி –
    உடுத்திய உடை – கொண்ட மாலை – இதுவே என் வரலாறு !!!
    இவையே தான் இந்திய சமூகத்தின் வரலாறும் கூட !
    எனக்கு முன் இச்சமூகத்தில் மனிதன் எப்படி மதிக்கப்பட்டான் ?
    ஒரு சாமான்யனின் கருத்துக்கு என்ன மதிப்பு ?
    ஒரு சாமான்யனின் வாழ்க்கை முறை என்ன?
    மனிதன் தன் சக மனிதர்களால் எப்படி நடத்தப்பட்டன் ?
    கல்வி முறை எப்படி இருந்தது ?
    தொழில் முறை எப்படி இருந்தது ?
    ஒரு ஆட்சியின் போது – ஏன் – எதற்கு – என்று கேள்வி எழுப்பபட்டதா ?
    நான் ஏன் செய்ய வேண்டும் ? என ஏதேனும் புரட்சி இருந்ததா ?
    ஒரு சாதாரண பெண் எப்படி மதிக்கபட்டாள் ?
    - இது அல்லவா வரலாறு ? – இது அல்லவா ஒரு சமூகமும்
    - ஒரு நாகரீகத்தின் அடையாளம் ? ( வரலாறு ? )

    அப்படி பார்க்கையில் என் தமிழ் சமூகம் எனக்கு என்ன சொல்கிறது ?

    நீங்கள் கூறும் SO CALLED சோழன் ஆட்சியில்
    மக்கள் சமமாக நடத்தப்பட்டார்களா ?
    பெண் எப்படி மதிக்கப்பட்டாள் ( ராஜகுமாரியை தவிர்த்து ) ?
    கல்வி ( குல கல்வியை தவிர்த்து ) ?
    அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்டதா ?
    சாதீயம் இல்லையா ?
    தீண்டாமை இல்லையா ?
    மதவெறி இல்லையா ?

    இப்படி கொள்வோம் !
    தஞ்சை பெரியகோவில்
    ஆயிரம் வருடம் கடந்து நிற்கும் கட்டிட கலை ;
    கம்பீரமானதோர் தோற்றம் ;
    இமையம் கொடைந்து கொண்டு வந்து இறைவன் ;
    இவை யாவும் எப்படி சாத்தியம் ?
    மக்கள் இன்றி ?
    இன்னும் தெளிவாக சொன்னால்
    அக்கோவில் கட்ட கூட்டம் கூட்டமான அடிமைகளை கொண்டே
    கட்டியிருப்பார்கள்
    அக்கோவிலில் இறைவன் பிரதிஷ்டை செய்யப்பட்டபின்
    ஆனால் அவ்வடிமைகளில் எவரேனும் அக்கோவிலின் உள்ளே
    அனுமதித்திருப்பார்களா ?
    இறைவன் என்ற ஒருவனின் உருவம் என்ற ஒன்றை பல
    வம்சங்களின் கண்கள் காணாமலே – அக்கண்கள் மறைந்திருக்கும்


    - தமிழ் சமூகத்தின் வரலாறு என்பது

    மக்களை மறந்து மன்னன் ஒருவனின் புகழ் பாட அம்மன்னனே
    ஏற்படுத்திய தற்பெருமை அடையாளங்களே ஆகும்..
    அக்கால புலவர்கள் யாவரும் மன்னனின் புகழ் பாடும் அசைவிகலாக
    மட்டுமே இருந்துள்ளனர்

    - உலகிற்கே நீதி உரைத்த காப்பியமாம்

    சிலப்பதிகாரம் – அவ்வதிகாரம் கூட இளங் “ கோ “ ஒருவனால்
    எழுதப்பட்டதால் தான் இன்று வரை நிலைத்துநிற்கும் காப்பியமானது
    இதே ஒரு சாமான்யனின் எழுத்திற்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்குமா ?
    சாமான்யன் அப்படி எழுத முடியுமா ? நிச்சயம் முடிந்திருக்காது
    காரணம் : கல்வி என்பது அன்று அனைவருக்கும் வழங்கப்படவில்லையே ??
    - இச்சமூகம் எனக்கு தந்தது வரலாறு அல்ல ஒவ்வொரு
    - அரசனும் தன் புகழை பாடிய தற்பெருமை புகழாரம்....

    ReplyDelete
  2. வணக்கம் CP Balaji நண்பர் அவர்களே வரலாறு எனும் வரலாற்றை நமக்கு எழுதித்தந்த இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் நீங்கள் சொல்லுவது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டனர் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.

    இலக்கியங்கள் என்னவோ மன்னனை மையமாக வைத்துதான் பாடப்பட்டு உள்ளது . அதில் உள்ள மக்களின் வாழ்கை முறை ,பெண்களின் நிலை,கல்விக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், உணவு முறைகள், பழக்கவழக்கங்கள், ஆடை அணிகலன்கள் போன்றவற்றை பற்றிய ஆய்வுகளை இப்போது உள்ள ஆய்வாளர்கள் செய்யவில்லை, ஆய்வு செய்தவர்கள் எல்லாம் மன்னர்களோடு நின்றுவிட்டனர் அதற்க்கு பல அரசியல் காரணமும் உள்ளது.

    மக்களை மறந்து மன்னன் ஒருவனின் புகழ் பாட அம்மன்னனே
    ஏற்படுத்திய தற்பெருமை அடையாளங்களே ஆகும் என்று நீங்கள் சொல்வது அறியாமையின் வெளிப்படக இருக்கலாம்.

    தொல்காப்பியம் ஒன்று போதும் நம் ஆதி தமிழரின் வாழ்கையை சொல்ல படித்து பாருங்கள் ஒருமுறை அதை இலக்கணநூல் என சொல்லி நம்மை ஒரு குறிப்பிட்ட சமூகம் ஏமாற்றி வருகின்றது.

    சங்க பாடலை பாடிய ஏறத்தாழ 2352 பாடல்களை 700 புலவர்கள் பாடியுள்ளனர். 38 பெண்பாற்புலவர்களும் உண்டு இது ஒன்றே போதும் அன்றைய பெண்களின் நிலையை சொல்ல. (கி.பி 1 ல் இருந்து இன்று வரை 10 பெண்மணிகள் கூட இல்லை )

    சிலப்பதிகாரமும், ஒரு 25 சங்க பாடல்களும் வேண்டுமானால் அரசர்களால் எழுதப்பட்டிருக்கலாம் ஆனால் உலக புகழ் பெற்ற பல சங்க பாடல்களை பாடியிருப்பது யார் என்பதை உங்களின் சிந்தனைக்கு விட்டு விடுகின்றேன்.

    உலகம் முழுவதும் உள்ள 19600 க்கு மேற்பட்ட தமிழ் பெயர்களை கொண்ட இடங்கள் சொல்லும் நம் மக்களின் கடல் மேலாண்மையை.

    மண்ணில் இருந்து எடுக்கப்பட்ட பானை ஓடுகளில் உள்ள பண்டைய தமிழ் எழுத்துக்கள் சொல்லும் சாதாரண தொழிலாளிக்கும் கல்வி அறிவு இருந்தது என்பதை.

    65000 மேல் கிடைத்துள்ள கல்வெட்டுகள் சொல்லும் படிப்பு மன்னனுக்கு மட்டும் சொந்தமாக இருக்கவில்லை என்று .

    நண்பரே நம்முடைய வரலாற்றை வெளிக்கொண்டுவர நினைத்த வரலாற்று ஆசிரியர்களை விட நம்முடைய வரலாற்றை அழிக்க நினைத்த வரலாற்று ஆசிரியர்களே அதிகம். அதன் பின்விளைவுகள் தான் நீங்கள் காரணம் என்று சொல்லியது .

    எனது வேண்டுகோள் ஒரு முறை தொல்காப்பியம் படித்து பாருங்கள் புரியும் நம் படிப்பது எப்படி பட்ட வரலாறு என்பது.

    உங்களுக்கு நம்முடைய வரலாற்றையும் அழிவின் விழிம்பில் உள்ள தொன்மையான இடங்களையும் காக்கும் சிந்தனை இருந்தால் உங்களின் உதவி எனக்கு தேவை.

    அன்புடன் உங்கள் நண்பன்,
    சரவணன் கந்தசாமி,
    அலைபேசி எண்,
    9942267223

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

முன் காலத்தில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்குகள் முழங்குவது வழக்கம். அந்த சங்குகளில் இருந்து எழும் ஓசையானது எதிரிகளின் மனதில் அச்சத்தையும் கலகத்தையும் உருவாக்கும் சக்தி உடையது. சங்கின் நாதமானது ஒரு செயலில் எழக்கூடிய தடைகளை நீக்க வல்லது. இதனாலேதான் ஒரு செயலின் ஆரம்பத்திலும்,முடிவிலும் சங்கு முழங்கப்படுகிறது. மகாபாரதப் போரில், கௌரவர்களின் சேனாதிபதியான கங்கை மைந்தர் பீஷ்மர் தன் சங்கை முழங்கிய போது ,எதிர் தரப்பில் சாரதியாக அமர்ந்து இருந்த பகவான் ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் தன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை முழங்கினார்.அதன் பிறகு அர்ஜுனன் உடைய தேவதத்தம் ,பீமனுடைய பௌன்றம் ,யுதிஷ்ட்ரருடைய அனந்த விஜயம் ,சஹாதேவனுடைய மணிபுஷ்பகம், நகுலனுடைய சுகஹோசம் என வரிசயாக சந்குங்கள் எதிரொலித்தன. போருக்கு தயார் என்று பாண்டவர்கள் அளித்த பதில் சங்கு துர்யோதனன் மட்டும் இன்றி கௌரவ படையின் ஊடே கலக்கத்தை உருவாக்கியது. கிருஷ்ணன் வைத்திருந்த பாஞ்சஜன்யம் ஆனது மிகவும் மகத்தான சக்தி பெற்ற வலம்புரி சங்கு ஆகும். ஆயிரம் சிப்பிகளுக்கு இடையில் ஒரு இடம்புரிச் சங்கு தோன்றும். அதே போல ஆயிரம் இடம்புரி சங்குகளுக்கு இடையில் ஒரு வலம்ப...

அத்தியாயம் 3

“ யார் நீ ?” கம்பீரமாக வந்தது கேள்வி . தோற்றத்துக்குரிய வீரமும் , தோரணையும் சற்று கூட பிசக வில்லை . அவள் நின்ற தோரணையே அவள் சாதாரண பெண் அல்ல என்பதைக் காட்டியது . சோழர்களைப் பற்றி ஆயிரம் தான் படித்திருந்தாலும் இவளை பார்த்த உடன் ‘ அப்பப்பா , பெண்களுக்கே இவ்வளவு வீரம் என்றால் இது உண்மையிலே புலி வம்சம் தான் ‘ என்ற எண்ணம் எனக்கு உதித்தது . மதிப்பு நிறைந்த விழிகளை அவள் கயல் விழிகளின் மேல் நாட்டியதும் , நினைவு தெளிந்தவன் போல் பேசத் துவங்கினேன் . “ என் பெயர் திவாகரவர்தன் . தங்களின் வீரத்தைக் கண்டு , உங்களை பாராட்டாமல் இருக்க இயலவில்லை . அதற்ககுள் இவர்கள் ...” “ வர்தனர் பரம்பரையோ ? வடக்கே உடுக்கும் உடுப்பு இதுவல்லவே . நீ பாரத தேசத்தவன் போல் இருக்கிறாய் . ஆனால் ஆங்கிலேயர் உடுப்பில் இருகிறாயே ?” “ நான் தமிழன்தான் . 1500 வருடம் காலப் பின் நோக்கில் வந்துள்ளேன் .” அவள் சிரித்துக் கொண்டே “ இளைஞரே , இதெல்லாம் வேறெங்காவது வைத்துக் கொள்ளுங்கள் . இது சோழ நாடு . போர் காலம் வேறு . பத்திராமாக ஊர் போ...

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு : மகாகவியின் உன்னதமான வரி இது. குரோதத்துக்கும் ரௌதிரதுக்கும் சிறிய வித்யாசம் மட்டுமே. அது எங்கு எப்பொழுது யார் மீது என்ற கேள்விகளைப் பொருத்தது.ரௌத்திரம் என்ற ஒன்றை பல இடங்களில் இந்த மனித சமூகம் மறந்து விடுகிறது. இதிகாசங்களில் தொடங்கி இன்று வரை மனிதன் ரௌத்திரம் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை. நமக்கு நேர்ந்தால் அநீதி; பிறருக்கு நேர்ந்தால் விதி என்று என்னும் மனித குல மாணிக்கங்கள்  நாம். சமுகத்தில் நடக்கும் அநீதி கண்டு கோபம் கொள்வோர் எத்தனை பேர் ?நாடு என்ன நிலையில் இருந்தால் என்ன? யாரு எப்படி போன என்ன? எனக்குன்னு வர வரைக்கும் நான்  சும்மா தன இருப்பேன்.இப்படி பட்ட எண்ணம் தான் இன்று மேலோங்கி நிற்கிறது. இன்று மட்டும் அல்ல புண்ணிய காவியம் ஆனா மகாபாரதத்தில் தொடங்கி இன்று வரை இருக்கும் சாமானிய மக்கள் மன நிலை. அன்று அந்த துருபதன் மகளும்  ,வேள்வியில் உதித்தவளும் ஆனா திரௌபதிக்கு சபையில் நடந்த அநீதி கண்டு எழுந்தவர்கள் எத்தனை பேர்?   இதுவே. பாஞ்சாலி சபதத்தில் பாரதி கூறுவது : "நெட்டை மரங்களென நின்று புலம்பினார்  பெட்டை புலம்பல் பிறர்க்குத் துணை...