இந்த பெயருக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை,சக்கரவர்த்தி ,மாமன்னர் ராஜேந்திர சோழன். கங்கை வரை தன் பலத்தை விஸ்தரித்ததால் அவர் கங்கை கொண்ட சோழன் என்று அழைக்கப்பட்டார்.ராஜா ராஜா சோழ தேவருக்கு மகனாக பிறந்தவர். தந்தை, எட்டு அடி பாய்ந்த புலி:மகன் பதினாறு அடி பாய்ந்த புலி. சோழ தேசத்தின் மிக உன்னதமான ஆட்சிக் காலம் ராஜேந்திரன் ஆட்சி தான். வீரத் தமிழனை அறியாத தமிழர்களாய் நம்முள் பலரும் வாழ்கிறோம். ஆடி மாதம்,மகர ராசி,திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர். இந்த கணக்கு படி இன்று வீரமாமன்னன் ராஜேந்திரன் பிறந்த நாள். அவர் அரியணை ஏறிய ஆயிரமாவது வருடம் இது. 1014ஆம் ஆண்டு ,ராஜா ராஜர் இறந்த பிறகு, அவர் அரியணை ஏறினார். இவர் பிறந்தநாளுக்கு சமர்பணமாக இதோ இந்த படைப்பு. தந்தைக்கு எட்டா கனியாக இருந்த பலவும்,ராஜேந்திரன் கைக்கெட்டியது. சேர தேசத்தயும் ,பாண்டியர்களையும் தலை காட்ட இயலாதவாறு அடித்து நொறுக்கினார்.ராஜ ராஜன் காலத்திலிருந்தே ந...
சப்தங்கள் தொலைத்த இரவில் தமிழை நோக்கி ஒரு தவம்.