ஊர் சுற்றி ஒரு காலத்தில் இன்று நானப்படியில்லை, பேர் பெற்ற தலங்கள் நூறு போகாமல் விட்டதில்லை. துணையென யாருமில்லை. எவருதவியும் கேட்டதில்லை. நதிகளின் தீரம் அலசி கோட்டைகள் ஏறியிரங்கி போர் நடந்த வெளிகள்கண்டு விம்மியே நின்றிருப்பேன். அரமணை வாசல் தோட்டம் மலைப்படி கோவில்குளங்கள் அன்றிருந்த ராஜபாட்டை அழியாத சிற்பக் கூடம் இவையெல்லாம் விருப்பக்கணக்கு மனிதரே வியப்பு எனக்கு. மனிதரை அறிந்து கொள்ள சரித்திரம் படிக்க வேணும் தன் கால் இடராதிருக்க மற்றவர் பாதை வேணும். அவனழிந்தது போண்ணாலென்றால் என் காமம் பம்மியிருக்கும். புத்தகச் செருக்குயென்றால் என் புத்தி அடக்கம்கொள்ளும். சிற்பத்தில் பொறுமை கண்டு என் படைப்புக் கூர்மையாகும். அரண்மனை அகலம் கண்டு அவனெங்கே என்று தேடும் அத்தனையும் மண்ணாய்போக அலட்டலகள் யாவும் அபத்தம் உழைப்பதை மேம்படுத்தி உயர்வேதும் விரும்பிடாது என் கடன் பணியேயென்று இருத்தலோர் தனித்தசுகமே. காலத்தின் கோலம்கண்டால் வாய்விட்டுச் சிரிக்கத்தோன்றும் சிலசமயம் துக்கம் பெருகி கண்ணீரும் தானாய் வழியும் நிகழ்காலம் கடந்த காலம் எதிர்காலம் மூன்றுக்குள்ளே இருப்பதே மனிதக் ...
சப்தங்கள் தொலைத்த இரவில் தமிழை நோக்கி ஒரு தவம்.